ஏந்திடுவோம் பார-தீ-யை இனியாவது
ஏந்திடுவோம் பார-தீ-யை இனியாவது
மகாகவியின் நினைவு நூற்றாண்டு
இருட்டுக்கு நடுவே
இந்தியா இருந்தபோது
நெருப்புக் கவி பந்தம்
நீட்டியவன் நீதானே….
வேட்டுகளைக் கண்டும்
வெருளாத துரைத்தனத்தார் உன்
பாட்டுகளைக் கேட்டன்றோ
பதறித் துடி துடித்தார்….
பொன்னேயானாலும்
அந்நியச் சங்கிலி
அடிமை விலங்கென்று
அடையாளம் காட்ட முடிந்தது
உன்னால் தானே….
நீ மரித்துப் போய் பல மாமாங்கங்கள்
உன் அவதார மகிமை மட்டும் இன்னும்
அடையாளம் காணப்படவேயில்லை…..
ஆனால், இன்றோ நாங்கள்….
உன் கோரிக்கைகளை எல்லாம்
காற்றுக்குக் காணிக்கை ஆக்கிவிட்டு
விழுந்து விழுந்து விழாக்கள் நடத்துகின்றோம்….
இதைத் தவிர வேறென்ன செய்து விட்டோம்…
வெட்கமாய் தான் இருக்கிறது உன்
வெளிச்ச வரிகளின் விலாசம் தேட….
வெட்கமாய் தான் இருக்கிறது.
………………………………………………………………………….
முனைவர். சுடர்க்கொடி கண்ணன்
நூறாண்டு முடிந்தது. இனியாவது பாரதியின் கனவுகளை நிறைவேற்றுவோம்.