வென்று காட்டுவோம் வா; இந்த உலகத்தில் எல்லா பிரச்சனைக்கும் ஒரு தீர்வு இருக்கு!
இப்பதான் Facebook ல ஒருத்தர் Depression ல தற்கொலை பண்ணிகிட்டதா பார்த்தேன். ரொம்ப கஷ்டம் ஆயிடுச்சு. Depression ங்கிறது ஒரு வகையான மன தாக்கம்.
அது கண்டிப்பா மருத்துவர்கிட்ட போனா தான் சரியாகும். Motivational பேச்சு கேக்குறது, பாடல், டிராவல் னு பண்ணாலும் Stress குறையலாம். ஆனா Depression போகாது. அதுக்கு தேவை சரியான மனநல சிகிச்சை.
நான் எப்போதுமே Positive ஆ இருக்கிற ஆள். ஆனா போன வருஷம் 1 மாசம் Depression காக மனநல மருத்துவர்கிட்ட சிகிச்சை எடுத்தேன். பல பேருக்கு தெரிஞ்சிருக்கும் போன வருஷம் எங்க குடும்பத்தில அப்பா, கணவர், மாமனார் கோவிட் பாதிக்கப்பட்டு ஒரே நேரத்துல மருத்துவமனையில அட்மிட் ஆகிட்டாங்க.
நான் சென்னையிலும் தம்பி கிருஷ்ணகிரியிலும் கூட இருந்து கவனிச்சிகிட்டோம். கிட்டத்தட்ட 18 நாள் உயிர்போராட்டம் தான். கிருஷ்ணகிரி, சென்னை னு அலைஞ்சு கோவிட் வார்ட் ல தான் 18 நாட்கள் இருந்தேன்.
கண் முன்னாடி அடுத்தடுத்து பறிபோன உயிர்கள், ஒருத்தர்லாம் அவரோட அம்மாவுக்கு அட்மிட் பார்ம் என்னை எழுத சொல்ல, நான் எழுதிட்டு இருக்கும் போதே அந்த அம்மா செத்து போக அப்படியே உறைஞ்சு போய் ஒரே இடத்தில உட்கார்ந்துட்டேன்.
ஒரு நாள் இரவு அப்பாவுக்கு வச்ச ஆக்சிஜன் தீர்த்து போய் அதிகாலை 4 மணக்கு அப்பா ஹாஸ்பிடல் ல இருந்து எனக்கு போன் பண்ணி ஆக்சிஜன் தீர்ந்து போயிருச்சு மா.. 3 பேர் அடுத்தடுத்து செத்துட்டாங்கனு சொல்ல 18 லிட்டர்ல சுவாசிசிட்டு இருந்தவர் 1 புள்ளியில 2 மணிநேரம் உயிர கையில பிடிச்சுட்டு இருந்த நிமிஷங்கள் சென்னையில இவங்க கூட ஹாஸ்பிடல் ல இருந்த எனக்கு கதறி அழுகிறத தவிர ஒன்னும் செய்ய முடியல.
அதிகாலை 4 மணிக்கு 50 போன்கால் பண்ணியும் யாருமே எடுக்கல. Hospital ல இருந்த நாட்கள் ல படுத்தா தூக்கம் வராது. படுத்த 10 நிமிஷத்துல Heart Beat அதிகமாயி வேர்த்து படபடத்து எழுந்து உட்கார்ந்திடுவேன். சுத்தமா தூங்கவே இல்ல அப்போலாம்.
கடும் போராட்டத்திற்கு பிறகு 3 பேரும் பத்திரமா வீட்டுக்கு வந்து சேர Home Quarantine ல இருந்தோம். 3வது நாள் அதிகாலை 3 மணி இருக்கும் . நான் எழுந்திரிச்சு மூஞ்சு கழுவி , ஹாஸ்பிடலுக்கு போக Bag உம் Falsk கும் தேடிட்டு இருந்தேன்.
5 நிமிஷத்துக்கு அப்புறமாதான் மண்டையில உறைச்சது அட நம்ம தான் டிஸ்சார்ஜ் பண்ணி கூட்டிட்டு வந்துட்டோமேனு.
சரி மனசு Depression Mode ல இருக்குதுனு தெளிவா புரிஞ்சி போச்சு. விடிஞ்சதும் மனநல மருத்துவர் கிட்ட கால் பண்ணி பிரச்சனையை சொன்னேன். அவங்க, இது Mental Trauma . நீங்க நேசிக்கிறவங்களோட உயிர் போராட்டத்த பாத்ததுனால வந்தது.
மேலோட்டமா இது தெரியலனாலும் Subconscious Mind பாதிக்கப்பட்டு இருக்கு. அதனால ஒரு மாசம் மருந்து எடுத்துட்டு நல்லா ரெஸ்ட் எடுங்கனு சொன்னாங்க.
எல்லா வேலையையும் ஒதுக்கி வச்சிட்டு 1 மாசம் மருந்துகள் 2 மாசம் நல்லா சாப்பாடு தூக்கம். அப்புறம் சூப்பரா சரியாயி Back to form வந்தாச்சு.
அதனால Depression னு தெரிஞ்ச உடனேயே மனநல மருத்துவர்கள அணுகிறது ரொம்ப அவசியம். அதே போல இந்த உலகத்தில எல்லா பிரச்சனைக்கும் ஒரு தீர்வு இருக்கு. தற்கொலை என்னைக்குமே பிரச்சனைக்கு தீர்வாகாது. எல்லாம் ஒரு நாள் சரி ஆகும்.
நன்றி: Hema Rakesh
Leave a Reply