திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டம் சேயூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்றைய தினம் 75 வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது!

Share Button

திருப்பூர் :-

திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டம் சேயூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்றைய தினம் 75 வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியர் D.கொண்டப்பன், பள்ளி ஆசிரியர் ஆசிரியைகள் மாணவர்கள் மற்றும் பொற்றோர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.

இந்த சுதந்திர தின நன்னாளில் நமது தேசத்தந்தை காந்தியடிகளின் அகிம்சை வழியில் போராடி, நம் நாட்டு மக்களின் இன்னல்களைப் போக்கி சுதந்திரம் பெற்றுத்தந்ததை ஆண்டு தோறும் ஆகஸ்ட்டு 15 அன்று கொண்டாடுகிறோம்.

இந்த வகையில் நமது சேயூர் ஊராட்சி ஒன்றி தொடக்கப்பள்ளியில் பயிலும் 500 மாணவர்கள் முன்னிலையில் அப்பகுதியைச் சார்ந்த பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி கே.ஆஷாமீனா அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

ரோட்டரி சங்கத் தலைவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு இந்த விழாவினை சிறப்பித்து மாணவர்களுக்கு இனிப்பு கொடுத்து மகிழ்ந்தனர்.

இதில் பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி, திருக்குறள் ஒப்புவித்தல் மற்றும் கொடிப்பாடல், கட்டுரை, கவிதை என பேசி குழந்தைகளின் திறமையை வெளிப்படுத்திடும் விதமாக நிகழ்ச்சிகளை சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தினார்கள்.

மேலும், பெருந்திரளாக கலந்து கொண்டுள்ள அவையில்  அதே பள்ளியில் பயிலும் 3 ஆம் வகுப்பு மாணவி தெ.தன்விகாவின் சுந்திர தின கவிதை வாசித்துக் காட்டியதில் தலைமையாசிரியர், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அங்கு வந்திருந்த அனைத்து பொதுமக்கள், பெருந்தகை தலைவர்கள் அனைவராலும் பாராட்டப்பட்டார்கள்.

கவிதை வாசித்த மாணவி தெ.தன்விகாவின் கவிதை மிகவும் சிறப்பு வாய்ததாக இருந்தது என வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் பாராட்டு தெரிவித்து மேலும் அடுத்தடுத்து கல்வியிலும் மேடை பேச்சிலும் சிறந்து விளங்க வேண்டுமென வாழ்தினார்கள்.

செய்திக்காக திருப்பூரில் இருந்து…

N.தெய்வராஜ், சமூக ஆர்வலர் – திருப்பூர்.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *