தேசிய தீயணைப்பு தினத்தினையொட்டி கிருஷ்ணகிரி தீயணைப்புத் துறை சார்பில் தீ விபத்தின் போது பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்ட தீயணைப்புத்துறை சார்பில் இன்று தேசிய தீ தடுப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி அருகே உள்ள தனியார் பள்ளியில் தீ விபத்துக்களின் போது பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு காப்பாற்றுவது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்ட தீயணைப்பு அலுவலர் வேலு தலமையில் நடைப்பெற்ற இந்த நிகழ்ச்சியின் போது 50 தீயணைப்பு வீரர்கள் கலந்துக்கொண்டு தீ விபத்தினால் ஏற்படும் பாதிப்புகளின் போது பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு காப்பாற்றுவது குறித்து செயல் விளக்கம் செய்துக் காட்டினார்கள்.
மேலும் இந்த நிகழ்ச்சியின் போது உயரமான கட்டிடம், கேஸ் சிலிண்டரினால் ஏற்படும் தீ விபத்து, குடிசை வீடுகள் மற்றும் கட்டிட இடர்பாடுகளில் சிக்கிக் கொண்டவர்களை எவ்வாறு காப்பாற்றுவது குறித்து தீயணைப்பு வீரர்கள் செயல் விளக்கம் மூலம் பள்ளி மாணவ, மாணவிகள் மத்தியில் சிறப்பாக செயல் விளக்கங்கள் மூலம் செய்துக் காட்டினார்கள். நிலைய அலுவலர்கள் ஜானகிராமன், ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலத்து கொண்டனர்.
Leave a Reply