ஆதரவற்ற மூதாட்டிக்கு அடைக்கலம் தந்த திருப்பூர் நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை

Share Button

திருப்பூர் :

கைவிடப்பட்ட ஆதரவற்ற மூதாட்டிக்கு திருப்பூர் நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை இல்லத்தில் அடைக்கலம் தரப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், அவினாசி தாலுக்காவிற்கு உட்பட்ட போத்தம்பாளையம் பகுதியில் புதியதாக ஆதரவற்றோர் இல்லம் கட்டி வருகிறார் அறக்கட்டளையின் தலைவர் தெய்வராஜ்.

இந்த நிலையில் இன்னும் முழுமையாக கட்டிடப் பணிகளின் வேலைபாடுகள் முழுமையாக முடிவடையவில்லை. இருப்பினும் இந்த ஆதரவற்ற மூதாட்டியின் பரிதாப நிலைமையை அறிந்து தற்போது இந்த ஆதரவற்ற மூதாட்டிக்கு அடைக்கலம் தந்து உதவிட முன்வந்துள்ளோம் என்கிறார் நிறுவனத் தலைவர் தெய்வராஜ்.

இந்த மூதாட்டி சில தினங்களுக்கு முன் மிகவும் உடல் நிலை மோசமாகி இருந்ததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவினாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

முதலுதவி அளித்த பின்னர் உடல் நிலையில் பல்வேறு பாதிப்புகள் இருப்பதாக மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து சில தினங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த மூதாட்டியின் பெயர் மதி வயது 56 எனவும், தனக்கென யாரும் இல்லை தான் மட்டும் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்தேன்.

என்னால் முடிந்த வீட்டு வேலைகள் செய்து தன் வயிற்றுப் பிழைப்பை நடத்தி வருவதாகவும் அருகில் இருக்கும் மருத்துவ உதவி பெறும் பயனாளிகளிடம் கண்ணீர் மல்க தெரிவித்திருக்கார் மூதாட்டி.

இதனைத் தொடர்ந்து எங்களது நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளைக்கு அங்குள்ள ஸ்கேட்டிங் மாஸ்டர் பிரகாஷ் என்பவர் இந்த மூதாட்டி பற்றி எங்களுக்கு தகவல் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் நாங்களும் நேரில் சென்று இந்த மூதாட்டி மதியின் நிலைமையை கேட்டறிந்தோம்.

விசாரித்ததில் தனது கணவர் இறந்து 4 ஆண்டுகள் ஆகின்றது. தனக்கு ஒரே மகள் அவர்களும் காதல் திருமணம் செய்து கொண்டு தனது வாழ்க்கையை தேடிக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

மேலும் அவர்களுடன் செல்லவும் மனமில்லாமல் மகள் ஜோதி, மருமகன் அழகர்பாண்டி இவர்களும் தற்போது வாடகை வீட்டில் வசித்து வருவதால் போதுமான வசதி வாய்ப்புகள் இல்லை.

ஆகையால் எங்களாலும் எனது தாயாரை எங்களுடன் வைத்து பராமரிக்க முடியவில்லை என்று மகள் மருமகன் இருவரும் வேதனை தெரிவித்தனர்.

இதனால் இந்த மதி மூதாட்டியின் உடல் நிலையை கருத்தில் கொண்டு எங்களது நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளையின் ஆதரவற்றோரின் மறுவாழ்வு இல்லத்தில் அடைக்கலம் தந்து உதவியுள்ளோம் என்கின்றார் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் தெய்வராஜ்.

அறக்கட்டளையின் செயலாளர் திருமதி.சிவகாமியின் மனித நேய செயல் என்பது ஆபத்து நேரத்தில் உதவி செய்வதே, இறைவனுக்கு செய்திடும் நற்காரியம் ‌என மகிழ்ச்சியோடு தெரிவிக்கின்றனர்.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *