விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை
சென்னை :-
10 ஆண்டுகளாக சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை
அ.தி.மு.க ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர் வீட்டில் இன்று (18-10-2021) லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். சென்னை கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு ஆகிய இரண்டு இடங்களில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.
சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது வீட்டின் முன் அவரது ஆதரவாளர்கள் திரண்டனர். மேலும் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் போட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கு முன்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி ஆகியோரது வீடுகளில் ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Leave a Reply