தமிழகத்தில் 400 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு, தடுப்பு பணியில் சுகாதாரத்துறையினர்
சென்னை :-
தமிழகத்தில் 400 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு. தடுப்பு பணியில் சுகாதாரத்துறையினர் முழுமையாக ஈடுபட்டு வருகின்றனர் என்று மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழகத்தில் 400 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். டெங்கு தடுப்பு பணியிலும் சுகாதாரத்துறையினர், உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.
18 வயதுக்கு குறைவானவர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து மத்திய அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை. மத்திய அரசு அதற்கான அனுமதியை வழங்கியதும் உடனே தடுப்பூசி போட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
தமிழகத்தில் தொடர்ந்து மெகா தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதில் மக்கள் ஒத்துழைப்பு கொடுத்து கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் இன்று தொடங்கப்படுவதாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
Leave a Reply