பிரபல சாமியாருக்கு மீண்டும் ஆயுள் தண்டனை !
ஹரியானா :-
குர்மீத் ராம் ரஹீம் சிங்கிக்கு ஆயுள் தண்டனை
தேரா சச்சா சவுதா ஆசிரமத்தின் மேலாளர் ரஞ்சித் சிங் கொல்லப்பட்ட வழக்கில், ஆசிரமத்தின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் மற்றும் நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
ஹரியானா மாநிலம் சிர்சாவில், தேரா சச்சா சவுதா ஆசிரமத்தின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங். 2002-ஆம் ஆண்டு இவரது ஆசிரமத்தின் மேலாளராக பணி புரிந்த ரஞ்சித் சிங் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.
ஆசிரமத்தில் முறைகேடு நடப்பதாக அந்த தகவலை வெளியே சொன்ன காரணத்திற்காக மேலாளரை கொலை செய்ததாக புகார் எழுந்தது.
இந்நிலையில், ஆசிரம நிர்வாகியான குர்மீத் ராம் ரஹீம் மற்றும் கிருஷ்ணலால், ஜஸ்பீர் சிங், சப்தில் சிங், இந்திரசேனா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று (18/10/2021) அவர்கள் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டு வழக்கில் கைதான அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
அபராதமும் தண்டனையும்
குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு 31 லட்சம் அபராதமும் மற்ற நான்கு பேருக்கு 50 ஆயிரம் அபராதமும் விதித்தது பஞ்ச்குலால் சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம். சாமியார் குர்மீத் ராம் ரஹீம் பெண் துறவிகள் இரண்டு பேரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் பத்திரிகையாளர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply