பூக்கள் பூக்கும் தருணம் நூல் வெளியீடு

Share Button
சென்னை :-
பூக்கள் பூக்கும் தருணம் – நூல் வெளியீடு
*************************************************************
அமெரிக்கா முத்தமிழ் இலக்கியப் பேரவை மற்றும் கலை உதயம் பதிப்பகம் இணைந்து நடத்திய ஏழு நூல்கள் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் தன்முனைக் கவிதைகள் நூல் ” பூக்கள் பூக்கும் தருணம் ” அமெரிக்கா முத்தமிழ் இலக்கியப் பேரவையின் நிறுவனர் தாழை இரா உதயநேசன் அவர்கள் வெளியிட கவிஞர் அன்புச்செல்வி சுப்புராஜூ அவர்கள் பெற்றுக் கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
நூல் வெளியீடும் அதற்குப் பிறகு நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது. முன்னதாக தாழை இரா உதயநேசன் அவர்களது ஐந்து நூல்கள் வெளியிடப்பட்டன. மரபு கவிஞர் சரஸ்வதி பாஸ்கரன் நூலும் வெளியிடப்பட்டது.
விழாவில் தலைமையேற்று இனிய உதயம் ஆசிரியர் ஆரூர் தமிழ்நாடன் அவர்களும், ஓவியக் கவிஞர் அமுதபாரதி, வடசென்னை தமிழ்ச்சங்க தலைவர் எ.த.இளங்கோ, முனைவர் ஆதிரா முல்லை, பேராசிரியை மணிமேகலை சித்தார்த்தன், கவிஞர் அமுதா தமிழ்நாடன், மரபுக் கவிஞர் சரஸ்வதி பாஸ்கரன், எழுத்தாளர் சிவமணி, சின்னத்திரை நடிகை ரேகா நாயர், நூல் வடிவமைப்பாளர் மழலைக் கவிஞர் கன்னிகோயில் ராஜா, முனைவர் செந்தில்குமார், ஆகியோர் உடனிருந்தனர்.
பூக்கள் பூக்கும் தருணம் நூல்வெளியிட உறுதுணையாய் இருந்த கலை உதயம் பதிப்பகம் தாழை இரா.உதயநேசன் அவர்களுக்கும் கவிஞர் கன்னிக்கோயில் இராஜா அவர்களுக்கும் அணிந்துரை நல்கிய ஆரூர் தமிழ்நாடன் ஐயாவுக்கும், வாழ்த்துரை நல்கிய கவிஞர்கள் அனுராஜ், சாரதா சந்தோஷ், அன்புச்செல்வி சுப்புராஜ் , கன்னிகோயில் ராஜா ஆகியோருக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

விழாவிற்கு கா.ந.கல்யாணசுந்தரம் அவர்களுடைய துணைவியாரும், மகள்கள், சம்பந்தி, பெயரன் பெயர்த்திகள், மாப்பிள்ளையின் சகோதரர் என அனைவரும் நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கவிஞர்கள், நண்பர்கள் பலர், ஆன்றோர்கள் சான்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

விழா மேடையில் மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்களின் வாழ்த்துரை காணொளிக் காட்சியாக திரையில் வெளியிட்டார்கள். அவரது அற்புதமான பேச்சு மிகவும் சிறப்பு.
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

One response to “பூக்கள் பூக்கும் தருணம் நூல் வெளியீடு”

  1. Raju Arockiasamy says:

    மிக அழகான தருணம்… கூடுதல் சிறப்பாக பேத்தியின் உரை… குடும்பம் முன்னிலையில் வரமாக… வாழ்த்துக்கள் தன்முனைக்கவித் தந்தையே… தாங்கள் இன்னும் இன்னும் பல நூல்கள்… படைக்க வேண்டும்… தங்களைப் பின்பற்றி நாங்கள் தமிழ் வளர்க்க உதவ வேண்டும்… எனது வணக்கங்களும், பிரார்த்தனைகளும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *