இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா !
துபாய் :-
உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி
உலகக் கோப்பைக்கான சூப்பர் 12 சுற்றுக்கான தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று கொண்டு இருக்கிறது. உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக இந்திய அணி இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாட திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி நேற்று (18-10-2021) முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி இங்கிலாந்து அணியை எதிர் கொண்டது.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஜானி பேர்ஸ்டோ அதிகபட்சமாக 49 ரன்கள் எடுத்தார் மொயீன் அலி 20 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார்.
இதனைத் தொடர்ந்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி அதிரடியாக விளையாடி 19 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது 6 பந்துகள் மீதமிருந்த நிலையில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணி தரப்பில் கே.எல்.ராகுல் 24 பந்துகளில் 51 ரன்கள் இஷான் கிஷன் 46 பந்துகளில் 70 ரன்கள் குவித்தனர்.
இந்தியா (vs) பாகிஸ்தான்
24-ம் தேதி இந்தியா பாகிஸ்தானை எதிர்கொள்கிறது நீண்ட இடைவெளிக்கு பிறகு இரு அணிகளும் மோதிக் கொள்ளும் போட்டி என்பதால் இதற்கு ரசிகர்கள் இடையே அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Leave a Reply