கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு மட்டும் பொது இடங்களில் அனுமதி – தமிழக அரசு அறிப்பு

Share Button

சென்னை :-

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு மட்டும் பொது இடங்களில் அனுமதி – தமிழக அரசு அறிப்பு

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் மட்டுமே பொது இடங்களில் அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

கொரோன வைரஸை முற்றிலும் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், பள்ளி, திரையரங்கு, மார்க்கெட், மால்ஸ் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்கள் என அனைத்து பொது இடங்களிலும் கொரோனா தடுப்பூசி போட்டவர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தமிழக அரசு சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது. வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகளை மக்கள் கண்டிப்பாக அனைவரும் செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் தமிழக அரசு தெரிவித்துளளது.

தமிழக அரசு தற்போது வீடு தேடி தடுப்பூசி செலுத்தும் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. வாரத்திற்கு இரண்டு நாட்கள் தடுப்பூசி முகாமை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் பள்ளி, திரையரங்கு, மார்க்கெட், கல்லூரிகள் போன்ற இடங்களில் தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும் என உரிமையாளர்களுக்கு தமிழக பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Comments are closed.