கரும்பலகை
கரும்பலகை
பூட்டப்பட்டக் கதவுகள் திறக்கப்படாமலே
பூட்டிய சாளரத்தில் சரியாக
பூட்டப்படாத ஒரு சாளரம்
காற்றின் அலைகளில் பட்டு
அவ்வப்பொழுது எழுப்பும் சப்தம்
துக்கத்தையும் தூக்கத்தையும்
கலைத்தபடி சற்றே ஆறுதலாய்…
ஒரு வருடத்திற்கு முன்னால்
எழுதப்பட்ட பழைய வாசகத்தை
இன்னும் சுமந்தபடி…
இறந்த தேதியைத் தன்னில்
இன்னும் தாங்கியபடி…
புதிய சிந்தனைகள் ஏதும் இல்லாதபடி
சொல்பவரும் கேட்பவரும்
யாருமே இல்லாதபடி
எண்ணும் எழுத்தும் இல்லாதபடி
சுண்ணப்பொடிகள் இல்லாத
எந்த நெடியும் நொடியும்
தனக்கு மகிழ்ச்சி தராதபடி…
தூசி லேசாய் படர்ந்திருக்கும்
தன் மேனியின் மீது
எந்த வண்ணச்சுண்ணமும் பூசாதபடி…
மாணவர்களின் வருகையை
எதிர்நோக்கியபடி
விடுமுறை நாளில்
தன்னந்தனியாக புலம்பிக்கொண்டிருந்த
வகுப்பறை கரும்பலகை…
பொன். சண்முகசுந்தரம்
அருமை நண்பா
நன்றி நண்பரே