வறுமை இங்கே பெருமை அங்கே!
வறுமை வந்த போது எருமை மேய்த்த காலமும் உண்டு!
பணத்தேவை வந்த போதிலும் பேராசை வந்ததும் உண்டு!
ஏழையை ஒரு காலம் கை கட்டி வாய் கட்டி நிற்க வைத்த காலமும் உண்டு!
தினம் தினம் அரிசி சாதம் கிடைக்காத என ஏங்கிய காலமும் உண்டு!
இட்லி தோசை கிடைக்க தீபாவளி பொங்கள் பண்டிகை காலம் வராதா என காத்திருந்த காலமும் உண்டு!
வருடத்திற்கு ஒருமுறையாவது புதுத்துணி கிடைக்காதா என காத்திருந்த காலமும் உண்டு!
குடும்ப விழா, கோவில் விழா எப்ப வருமுன்னு காத்திருந்த காலமும் உண்டு!
வீடுகள் தோறும் முதுமைகளை பாதுகாத்த காலமும் உண்டு!
நிலாவைக் காட்டி குழந்தைக்கு சோறு ஊட்டிய காலமும் உண்டு!
ஏரி குலங்களை தூர்வாரி நீர் நிலைகளை பாதுகாத்த காலமும் உண்டு!
மண்ணரிப்பை தடுக்க பல வகை மரங்களை நட்டு வளர்த்து பாதுகாத்த காலமும் உண்டு!
பறவையினங்களை பாதுக்காக்க வேண்டி இயற்கை தானியங்களை தூவிய காலமும் உண்டு!
ஓலை குடிசையில் வாழ்ந்த காலமும் உண்டு!
காற்று மழை வீசிய போது நடுநடுங்கிய காலமும் உண்டு!
பாம்பைக் கண்டு படையே நடுங்கும் காலமும் உண்டு!
கிணற்றடி மேட்டில் கோபப் பட்ட காலமும் உண்டு!
ஆற்றங்கரை ஓரம் அமர்ந்து கற்களை எடுத்து வீசிய காலமும் உண்டு!
தந்தி கம்பம் அருகில் நின்று காதோடு காது வைத்து அதிர்வலையை கேட்ட காலமும் உண்டு!
வின்மினிப் பூச்சி பறந்தோடிய காலமும் உண்டு!
விட்டில் பூச்சிகள் காடுகளில் பறந்தோடிய காலமும் உண்டு!
மண் புழுக்கள் மண்ணுக்கள் வாழ்ந்த காலமும் உண்டு!
நண்டுகளும் தவளைகளும் பாம்புகளும் குட்டைகளில் வாழ்ந்த காலமும் உண்டு!
தேசத் தலைவர்கள் வாழ்ந்த காலமும் உண்டு!
இப்போது எல்லாம் அழிந்தும் மறைந்தும் மதிக்கப்படாமலும் வாழ்ந்து வரும் காலமே இன்றைய சூழ்நிலை… பழமைக்கு நிகர் இக்காலம் நீடிக்குமா… மீண்டும் பழைய நிலைக்கு திரும்புமா!
ந. தெய்வராஜ், ரிப்போர்ட்டர், திருப்பூர்.
புதுவரவு மாத இதழ்
Leave a Reply