இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின் காட்பாடி வட்டக்கிளையின் மேலாண்மைக்குழு கூட்டம் தலைவர் மற்றும் சார் ஆட்சியர் கே.மெகராஜ் தலைமையில் (10.06.2019) நடைபெற்றது.
செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் வரவேற்று பேசினார். அவைத்தலைவர் த.வ.சிவசுப்பிரமணியன், அவைதுணைத்தலைவர் இரா.சீனிவாசன், பொருளாளர் வி.பழனி, இணை செயலாளர் ஆர்.விஜயகுமாரி, மருத்துவகுழு தலைவர் டாக்டர் வி.தீனபந்து எம்.பிரபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:
தேசிய அளவில் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் காட்பாடி வட்டம் வேலூர் மாவட்டத்தில் இருந்து பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்கு குறிப்பாக மாற்று திறனாளிகளுக்கு உதவி செய்யலாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2020 முதல் 2022 வரையிலான மூன்றாண்டுகளுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செப்டம்பர் அல்லது அக்டோபர் 2019 ல் காட்பாடி கிளை சங்கத் தேர்தலை நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
14.06.2019 அன்று உலக இரத்த தானம் செய்தோர் தினம் சிறப்பாக கொண்டாடுவது என்றும் அன்றைய தினத்தில் இரத்த தானம் செய்தவர்களை தேர்வு செய்து விருது வழங்கி கௌரவிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மிடுக்கான நகரம் திட்டத்தின் கீழ் காட்பாடி ரெட்கிராஸ் கிளை அலுவலக கட்டிடத்தின் பின்புறம் உள்ள பூங்கா இடத்தினை பூங்கா அமைத்து ரெட்கிராஸ் அமைப்பின் பராமரிப்பில் வழங்க கோருதவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முடிவில் மேலாண்மைக்குழு உறுப்பினர் எம்.பிரபு நன்றி கூறினார்
படவிளக்கம் :
காட்பாடி ரெட்கிராஸ் சங்கத்தின் மேலாண்மைக்குழு கூட்டம் வேலூர் சார் ஆட்சியர் கெ.மெகராஜ் தலைமையில் நடந்த போது எடுத்தப்படம் உடன் செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், அவைத்தலைவர் த.வ.சிவசுப்பிரமணியன், துணைத்தலைவைர் ஆர்.சீனிவாசன், பொருளார் வி.பழனி, இணை செயலாளர் ஆர்.விஜயகுமாரி, மேலாண்மைக்குழு உறுப்பினர் மருத்துவர் வீ.தீனபந்து, எம்.பிரபு ஆகியோர்.
Leave a Reply