சென்னை மெட்ரோ ரெயில் நேரம் நீட்டிப்பு, காலை 5.30 மணியில் இருந்து இரவு 11 மணி வரை இயக்கப்படும்

Share Button
சென்னை :-
கடந்த ஆண்டு 2020 முதல் கொரோனா தொற்று பரவல் காரணமாக பல சேவைகள் நாடு முழுவதும் அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டிருந்தன. அந்த வகையில் நாடு முழுவதும் ரயில்கள் சேவை தடைப்பட்டன. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நிலைமை சீரானதையடுத்து ரயில் சேவை இயக்க முடிவு செய்யப்பட்டு இயங்கின.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுவதில் நேரக்கட்டுப்பாடுகள் இருந்தன. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதால் கட்டுப்பாடுகளும் படிப்படியாக தளர்க்கப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக, நாளையில் இருந்து மெட்ரோ ரெயில்கள் காலை 5.30 மணியில் இருந்து இரவு 11 மணி வரை இயக்கப்படும். காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் 8 மணி வரை ஐந்து நிமிட இடைவெளியிலும், மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியிலுல் ரெயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரெயில் ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்படும் என மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை கருதி பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு பயணிகள் விதிமுறைகளை பின்பற்றி ரெயில் பயணம் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெயில் பயணிகளின் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளின்படி சமூக இடைவெளியுடன் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். அவ்வாறு அணியத்தவறியவர்களிடம் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Comments are closed.