ஆசிரியர்களுக்கும் பாடப்புத்தகம் வழங்க வேண்டும் அரசுக்கு கோரிக்கை!

Share Button

விலையில்லா பொருட்களை பள்ளிகளுக்கு நேரடியாக வழங்க வேண்டும் அரசுக்கு கல்வியாளர்கள் சங்கமம் கோரிக்கை!

புதிய கல்வி ஆண்டு தொடங்கி மாணவர் சேர்க்கையெல்லாம் மகிழ்ச்சி அளிக்கும் அளவிற்கு அரசுப் பள்ளிகளில் நடைபெற்று வருகின்றன.

அரசுப்பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட வேண்டிய விலையில்லாப் பொருட்களெல்லாம் பள்ளிகளுக்கு நேரடியாக வழங்கப்பட வேண்டும் என ஆணை இருந்தும், அதற்கான நிதி ஒதுக்கப்பட்டிருந்தும் (மிகக் குறைவான நிதிதான்) 90% க்கு மேலாக, பள்ளிகளுக்கு நேரடியாக வழங்கப்படுவதில்லை.

ஆசிரியர்கள் நேரடியாக எடுக்கச் சென்றாலும், ஒரு நேரத்தில் அனைத்துப் புத்தகங்களும், குறிப்பேடுகளும், சீருடைகளும், காலணிகளும், எழுதுபொருட்களும் இதுவரை கிடைத்ததில்லை. அது தற்போதும் தொடர்கிறது.

இப்பொருட்களை எடுப்பதற்காக மட்டும் ஆசிரியர்கள் பள்ளியை விட்டு, குறைந்தபட்சம் ஐந்து தடவைக்கு மேலாக அலுவலகமோ அல்லது வழங்கப்படும் இடத்திற்கோ செல்ல வேண்டியதாக இருக்கின்றது.

இதிலும் விடுபடுகின்ற சில பொருட்களைப் பெற மற்றுமொரு நாளுக்காக காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. இதனை ஒரே நேரத்தில் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கக் கேட்டுக் கொள்கிறேன்.

அத்துடன் பாடம் நடத்துகின்ற ஆசிரியர்களுக்கு தனியே பாடப்புத்தகம் (Table copy) இதுவரை வழங்கப்பட்டது கிடையாது. எனவே ஆசிரியர்களுக்கும் ஒரு பாடப்புத்தகத்தை இணைத்து அரசு வழங்க வேண்டும் எனப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

சி.சதிஷ்குமார்,
நிறுவனர், கல்வியாளர்கள் சங்கமம்.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *