திருப்பூரில் 20 ஆண்டுக்கால சமூக சேவகரின் மனக்குமுறல்!

Share Button

திருப்பூர் :

சமூக சேவைகளிலும் கூட கலப்படம் கலந்த சுயநலங்களும் தாண்டவமாடுகின்றதா என்ற அச்சம் தற்போது ஏற்பட்டிருக்கிறது. மக்கள் நலன் சார்ந்து உண்மையாக சேவையாற்றிவரும் சமூக ஆர்வலர்களை புறம்தள்ளுகிறதா இந்த சமூகம்?

மண்ணில் தூவிய விதை எதுவோ அது மட்டும் தான் முளைக்கும். சேவை செய்யும் பலரின் மனங்களிலும் கலப்படம் கலந்த விதையையே மண்ணில் தூவி அவரவர் பெருமிதம் கொள்கிறார்கள். 20 ஆண்டுகாலமாக நியூ தெய்வாசிட்டி அறக்கட்டளை மூலமாக சமூக சேவை செய்துவரும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் திரு.ந.தெய்வராஜ் அவர்கள் பல்வேறு தகவல்களை சொல்லி மனக்குமுறலுடன் பல வேதனையான கருத்துக்களை தெரிவிக்கிறார்.

ஆதரவற்றவர்களுக்காக உண்மையாக 20 ஆண்டுகாலமாக உழைக்கும் எங்கள் அமைப்பிற்கு எந்தவித அங்கீகாரமோ, ஆதரவோ போதுமானதாக கிடைக்கவில்லை என்று மன வேதனையோடு கருத்துக்களை பகிர்கின்றார் சமூக ஆர்வலர் ந.தெய்வராஜ். பருவத்திற்கு தகுந்தவாறு விதை விதைத்து விளைய வைத்து அறுவடை செய்பவன் உண்மையான விவசாயி.

பருவம் தவறி ஏதோ ஒரு விதையை விதைத்தால் அது விவசாயிகளுக்கு அழகில்லையே. சேவைக்காகவே வாழ்ந்தவர்களெல்லாம் விலாசம் தெரியாமலையே இன்னுமும் வாழ்கிறார்கள் தானே? என்று மன வேதனையை புதுவரவு இணையதள செய்திப்பிரிவிற்கு தன் கருத்துக்களை ஆழமாக பகிர்ந்தார் சமூக ஆர்வலர் ந.தெய்வராஜ்.

சேவையெனும் பெயரை வைத்துக்கொண்டு பலரும் தன் தேவைக்காகவே தன்னை பிரபலப்படுத்தி கலப்பட விதையை தூவி தூவி பிரபலமாகி கொள்பவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள் என்கிறார்…

இன்றைக்கு ஒருவருக்கு வைத்த பெயரை விட்டு பெயரையே மாற்றி அழைப்பது போல சேவையிலும் முறையில்லாமல் செய்து அவரவர் தன்னை பிரபலமாக்க நினைப்பவர்கள் தானே அதிகளவில் நடமாடுகிறார்கள் இன்றைய காலக்கட்டத்தில்.

மருத்துவம் படித்தவர் மருத்துவ சேவை செய்யலாம், ஆனால் மருத்துவம் படிக்காத ஒருவர் மருத்துவம் பார்க்க முடியுமா..?

அதுபோல ஒவ்வொருவரும் தன் சேவைப்பணிகளில் கோட்பாடுகள் வைத்துத்தான் சேவைப்பணியைத் தொடர்வார்கள்.

ஆனால், இங்கே சேவைகளிலும் கூட கலப்படமாக மாறி… விதை மண்ணை நம்பி இருப்பது போல சேவைக்காக அர்ப்பணித்துக் கொண்டோரெல்லாம் இன்னுமும் பல எண்ணிலடங்கா சேவைகளை தொடர்ந்து செய்து பயணித்து தான் வருகிறார்கள்.

தன்னலம் பாராமல் சுயநலமின்றி ஆதரவற்ற மக்களுக்காக கடந்த 20 ஆண்டுக்காலமாக நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை மூலம் மக்கள் பணியாற்றிவரும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரை தொடர்பு கொண்டு உதவிட கீழ்காணும் அவரின் செல் எண்ணை தொடர்புகொண்டு உதவிடலாம்.  சமூக ஆர்வலர் ந.தெய்வராஜ், திருப்பூர் செல் எண் : 8667789076.

திருப்பூரிலிருந்து நமது செய்தியாளர்

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *