அனைத்து விவசாயிகளின் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
திருவாரூர் அருகே மணக்கால் அய்யம்பேட்டையில் பெண்களிடம் கலந்துரையாடிய அவர், பொள்ளாச்சி பாலியல் விவகாரத்திற்கு ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களே காரணமாக உள்ளது வெட்கக்கேடானது என கூறினார்.
மேலும் திமுக ஆட்சியில் மகளிர் குழுக்கள் கம்பீரமாக இருந்தது என்றும் ஆனால் தற்போது அவ்வாறு இல்லை எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து திமுக பூண்டி கலைவாணன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வராசுவுக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply