அருணாச்சல பிரதேசத்தில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பாஜகவைச் சேர்ந்த 18 பேர் ஒரே நாளில் அக்கட்சியிலிருந்து விலகியுள்ளனர்.
அருணாச்சல பிரதேசத்தில் மக்களவை தேர்தலுடன் இணைத்து சட்டமன்ற தேர்தலும் நடத்தப்படவுள்ளது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத அதிருப்தியால் அக்கட்சியிலிருந்து விலகிய அவர்கள், மேகாலயா முதலமைச்சரான சங்க்மாவின் தேசிய மக்கள் கட்சியில் இணைந்துள்ளனர்
வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில நாட்களில் மட்டும் இதுபோல சுமார் 25 முன்னணி தலைவர்கள் பாஜகவிலிருந்து விலகியுள்ளனர். சங்க்மாவின் தேசிய மக்கள் கட்சி தற்போது கூடுதல் பலம்பெற்றுள்ளதால் அக்கட்சி தேர்தலில் தனித்தே போட்டியிடும் எனவும் கூறப்படுகிறது
Leave a Reply