நீலகிரி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ஒரு கோடியே 41 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
நீலகிரியில் பேசிய அவர், மாவட்டத்தின் அனைத்து சோதனை சாவடிகளிலும் வாகன சோதனை துரிதப்படுத்தி உள்ளது என்றார்.
மாவட்டத்தில் 673 வாக்கு சாவடிகள் உள்ளது என்றும் இதில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகமுள்ள 78 வாக்கு சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்
அப்பகுதிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
Leave a Reply