மனித உணர்வுகளின் மிக நுட்பமான திரைமொழி “கருமேகங்கள் கலைகின்றன”!

Share Button

புதுவரவு சினிமா :

மனித உணர்வுகளின் மிக நுட்பமான திரைமொழி – “கருமேகங்கள் கலைகின்றன”!

“அழகி “ என்கிற உணர்ச்சி மயமான வெற்றி படத்தினை கொடுத்த இயக்குனர் தங்கர் பச்சன் 10 ஆண்டு இடைவெளிக்கு பிறகு இயக்கும் படம் “கருமேகங்கள் கலைகின்றன” இன்று (செப்-1) திரையரங்கில் வெளியாகி உள்ளது இத்திரைப்படம்.

இதில் இயக்குனர் பாரதி ராஜா ஜட்ஜாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். “அருவி” படத்தின் நாயகி அதிதி பாலன், கௌதம் மேனன், யோகி பாபு , மஹானா, சாரல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் .

ஒரே வீட்டில் வசித்தும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாத கடைசிமகன் கௌதம் மேனனுடன் பாரதிராஜா இந்தியாவில் வசிக்க, மற்ற இருவரும் வெளிநாட்டில் வசிக்கிறார்கள்.

அவரது 75 வது பிறந்த நாளை பிள்ளைகள் விலையியர்ந்த காரை பரிசளித்து, zoom மூலமாக வெர்ச்சுவலாக பார்த்து கொண்டாடுகிறார்கள்.

பெற்ற பிள்ளைகளை பார்க்க முடியாத பாரதிராஜா மனம் நொந்து அழும் போது எதிர்பாராமல் கிடைக்கும் பழைய கடிதத்தில் குறிப்பிட்ட தனது காதலியையும் மகளையும் தேடி வீட்டை விட்டு செல்கிறார்.

மறுபுறம் யோகிபாபு தனது பெறாத மகளை தேடி அதை ஊருக்கு பயணிக்கிறார். இருவரும் ஒரு புள்ளியில் சந்திக்க அவர்கள் தேடிய பாசம் கிடைத்ததா என்பதே மீதிக்கதை..

கௌதம் மேனன், அதிதி, மஹானா, சாரல் ஆகியோர் தங்களது கதாபாத்திரத்திற்கு பெருமளவு நியாயம் சேர்த்துள்ளனர்.

அழகி, சொல்லமறந்த கதை, பள்ளிக்கூடம் போன்ற இயக்குனரின் முந்தைய படங்களும் இதே போன்று மனித உணர்வுகளை மிக நுட்பமாக திரைமொழியில் கடத்திய உணர்ச்சி குவியல்கள் தான். அதே வரிசையில் கருமேகங்களும் கலைந்து செல்கின்றது எனலாம்.

பாரதிராஜா , எஸ் ஏ சந்திரசேகர், டெல்லிகணேஷ் போன்ற வயதானவர்களை அவ்வளவு குளோசப்பாக காட்டியிருக்க வேண்டியதில்லை என தோன்றுகிறது.

இருபது வருடங்களுக்கு முந்தைய காலகட்டத்தில் எடுத்திருக்க வேண்டிய படத்தின் சென்டிமெண்ட் காட்சிகள் இன்றைய 2k கிட்ஸ்களுக்கு எடுபடுமா? என தெரியவில்லை.

மொத்தத்தில் யோகிபாபு என்கிற குணசி்த்திர நடிகரும், பாரதிராஜா (85 வயது) என்கிற அருமையான திரைகலைஞனும் தமிழ் சினிமாவிற்கு கிடைத்திருக்கிறார்கள் என்பது சிறப்பே!

⁃ தனுஜா ஜெயராமன்

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *