கிருஷ்ணகிரியில் ரூ – 41 – லட்சம் திட்ட மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணி செங்குட்டுவன் MLA தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சாலைகள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதனை அறிந்த கிருஷ்ணகிரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.செங்குட்டுவன் அவர்கள் புதிய தார்சாலைகள் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டார்.
கிருஷ்ணகிரி ராயகோட்டை சாலை, மேம்பாலம் அருகிலிருந்து புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு இரண்டாவது பகுதி வரையிலும், மாவட்ட விளையாட்டு மைதானத்திலிருந்து அரசு கலை கல்லூரி வழியாக தனியார் பள்ளி வரையிலும், பைபாஸ் சலையிலிருந்து ஜக்கப்பன் நகர் வரையிலும் உள்ள சாலைகளை ரூ. 41 லட்சம் திட்ட மதிப்பிட்டில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் திரு.செங்குட்டுவன் அவர்கள் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கோவிந்தன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் அமீன் மற்றும் மாணிக்கம், குப்பன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
It’s too late