தி லெஜன்ட் திரைப்படம் சமூக அக்கறையோடு நகரும் கதை களம் நல்ல முயற்சி!
தி லெஜன்ட் திரைப்படம் சமூக அக்கறையோடு தற்போதைய நடப்புகளை பேச முயற்சிக்கும் எதார்த்தமான கதை களமாக நகர்கிறது. முதல் முயற்சியே முத்தான முயற்சி.
முதலில் இது “ச்சி..”. என்று முகம் சுளிக்க வைக்கும் திரைப்படம் அல்ல .
நடிகருக்கு முதல் படம் என்பதாலோ என்னவோ “பஞ்ச் டயலாக்குகள் அவ்வளவாக கவனத்தை ஈர்க்கவில்லை. இதே வசனங்களை நன்கு அறிமுகமான நடிகர் பேசியிருந்தால் கைத்தட்டல்களும் ஆரவாரங்களும் காதை பிளந்திருக்கும்.
முதல் திரைப்படத்தில் கேட்கும் போது ஆர்வம் மேலெழவில்லையோ என்பது எனது கண்ணோட்டம்.
ஓர் ஒப்பனை கலைஞராக இந்தத் திரைப்படத்தைப் பார்க்கும் போது இந்த நடிகரை இன்னும் இயற்கையாகவும் அவரது சிகையின் அடர்த்தி சற்று குறைவாகவும் நேர்த்தியாகவும் கொடுக்கப்பட்டிருந்தால் கண்களுக்கு இயல்பாக தெரிந்திருக்கும் என்று தோன்றியது,
அதை பூர்த்தி செய்யும் விதமாக legend அவர்களின் இரண்டாவது திரைப்படத்திற்கான போட்டோ சூட் புகைப்படங்கள் இன்று சமூக வலைத்தளங்களில் வலம் வருவதை கண்டேன் மகிழ்ச்சி.
இவரை முதல் திரைப்படத்திலேயே இப்படி காட்டி இருந்தால் அந்த திரைப்படம் சொல்ல வந்த கருத்தை முழுவதுமாக மக்களிடம் அடைந்திருக்கும் என்பது நிஜம்.
லதா அருண்
(தூரிகைப்பெண்)
Leave a Reply