ஜம்மு காஷ்மீரில் மேல்நிலை பள்ளிக் கல்வி கேட்டு ஏராளமான மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தினர்.
தோடா என்ற இடத்தில் 10ம் வகுப்பு வரை மட்டும் பயிலும் உயர்நிலைப் பள்ளி உள்ளது. அதன் பின்னர் மேல்நிலைக் கல்வி படிக்கவேண்டும் என்றால் 30 கிலோ மீட்டர் தூரம் சென்றுதான் படிக்கவேண்டும்.
இந்நிலையில் மேல்நிலைப் பள்ளி செல்வதற்கு பேருந்து வசதி இல்லாததாலும், அடர்ந்த வனப்பகுதி வழியாகச் செல்லும் மாணவ, மாணவிகள் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதாலும் தோடா பகுதியில் மேல்நிலைப் பள்ளி கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தோடா பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கய் என்ற இடத்திற்கு 30 கிலோ மீட்டர் தூரம் பேரணியாகச் சென்றனர்.
Leave a Reply