1980 ஆம் ஆண்டுகளில் மிகவும் பிரபலமான ஹீரோவாக அறியப்பட்டவர் நடிகர் சுமன். இவர் தற்போது பல படங்களில் கெஸ்ட் ரோலில் வருகிறார்.
தற்போது ஏ.எல் விஜய் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்துவரும் வாட்ச்மேன் படத்தின் அறிமுக விழாவில் கலந்து கொண்டு பேசிய சுமன் ஒரு முக்கிய விஷயத்தை தெரிவித்தார். அப்போது “வாட்ச்மேன் படத்தில் மிக சிறந்த கதாபாத்திரத்தில் தான் நடித்து வருகிறேன். இதற்காக ஏ.எல் விஜய்க்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
இதுவரை நான் 9 மொழிகளில் 150 படங்களுக்கு மேலாக நடித்துள்ளேன். ஆனால் தமிழ் படம் என்றால் அதில் எனக்கு தனி மகிழ்ச்சி. இயக்குனர் விஜய்யும் ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு புதுமையை காண்பிக்கக் கூடிய திறமை வாய்ந்த மனிதர்.
நான் ஒரு விஷயம் சொல்கிறேன்… நம் நாட்டின் உண்மையான வாட்ச்மேன்கள் ராணுவ வீரர்கள் தான். நாம் நிம்மதியாக வாழ அவர்கள் தான் எல்லையில் காவல் புரிகின்றனர். நமக்குள் தான் ஜாதி மதம் எல்லாம் இருக்கின்றது. அவர்களுக்குள் ஜாதி மத பேதம் இல்லை. அவர்களுக்கு என்னால் முடிந்த சிறிய உதவியை செய்ய வேண்டும் என்ற முடிவை எடுத்துள்ளேன்.
அதன்படி சினிமா ஸ்டூடியோ கட்ட தான் வாங்கியிருந்த 175 ஏக்கர் நிலத்தை நம் நாட்டின் வாட்ச்மேனாக இருக்கும் ராணுவ வீரர்களுக்கு வழங்க உள்ளேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன்” என நடிகர் சுமன் தெரிவித்து உள்ளார்.
எத்தனையோ படங்களில், நடிகர் சுமனை வில்லனாக பார்க்க முடிகிறது. அதே படத்தில் ஹீரோவாக நடிக்கும் நபருக்கு கோடான ரசிகர்கள் கூட்டம் வேற. ஆனால் படத்தில் வில்லனாக நடித்துவிட்டு நிஜ வாழ்க்கையில் உண்மையான ஹீரோவாக இருக்கிறார் நடிகர் சுமன் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply