தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், தமிழகம், கர்நாடகா,ஆந்திரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சில நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ், விசாரணை அமைப்புகளை மத்தியில் ஆளும் பா.ஜ.க., அரசு தவறாக பயன்படுத்துகிறது என குற்றம்சாட்டியது.
இதனை தொடர்ந்து, தேர்தல் நேரத்தில், விசாரணை அமைப்புகளின் நடவடிக்கை நடுநிலையுடனும், பாரபட்சமின்றியும் இருக்க வேண்டும். சோதனை குறித்து தங்களுக்கு தகவல் அளிக்க வேண்டும் என நிதி அமைச்சகத்திற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த சோதனை தொடர்பாக ஆலோசனை நடத்த வரும்படி, வருவாய்த்துறை செயலர் ஏபி பாண்டே, மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் பிசி மோடி ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
Leave a Reply