நீ விதைத்த கர்மமே உனக்கான அனுபவங்களை தருகிறது, தீயதை விதைத்து நல்லதை எதிர்பார்க்காதே!
நீ விதைத்த கர்மமே உனக்கான அனுபவங்களை தருகிறது, தீயதை விதைத்து நல்லதை எதிர்பார்க்காதே, இயற்கைக்கு மாறான உனது எந்த செயலும் உனக்கான நல்வினையை வழங்காது, பிறப்பும் இறப்பும் இயற்கையுடையது நிகழ்கால வாழ்க்கை மட்டுமே உனக்கானது.
எதிர்பார்ப்பை மட்டுமே விதைத்து கொண்டு இருக்கும் மனம் தான் உனது எல்லா பிரச்னைகளுக்கும் மூலம், உனது தேகம் பஞ்ச பூதங்களாலும் உனது இயக்கம் சக்தியாலும் உனது உயிர் முப்பொருள் வெளி ஒளி ஒலியாலும் படைக்கபட்டது.
உயிர் பரிமாணத்திற்கான சுழற்சியிலே நீ இங்கு பல கர்மங்களை விதைத்து அதற்கான வினையையும் அனுபவித்து கொண்டு இருக்கிறாய். இறைவன் என்ற தனிதன்மை இங்கு குறிப்பிட்ட படைப்பிற்க்கு மட்டுமே உரியது அல்ல, எங்கும் பரந்து விரிந்த வெளியில் உள்ளடங்கிய இயற்கையும் ஒளியும் ஒலியும் இருளும் இவைகளை முழுவதுமாக கொண்ட படைப்புகளின் வடிவமே இறைவன் ஆவார்.
உனது தேகத்தை படைத்த இறைவனே உனது உயிராகவும் உனது உணர்வாகவும் நீ தேடும் ஞானமாகவும் இருக்கிறார். ஒவ்வொரு படைப்பிற்க்கும் தனித்தன்மை உண்டு அந்த தனித்தன்மையே ஒவ்வொரு ஜீவனுக்கான இறைநிலை பரிணாமம் ஆகும்.
நீ பிறப்பதற்கு முன்பே உனது பிறப்பிற்கான நோக்கம் உன்னாலே தீர்மானிக்கப்பட்டது, இதனை அறிவதின் மூலமே நீ உன்மெய்யை காணமுடியும்.
நீ இங்கு பெறுவதும் இழப்பதும் மாயையின் விளையாட்டாகும், அவை தரும் அனுபவங்களை நீ ஏற்பதன் மூலமே நீ இங்கு வந்ததற்கான உன் மெய்யும் விளங்கும்.
கடவுளை தேடிய அனைத்து ஞானிகளும் இறுதியில் தன் மெய்யையே கண்டு கொண்டார்கள். நீயும் இறுதியாய் உன்மெய்யையே கண்டு கொள்ள போகிறாய்.
உனக்குள் நான் யார் என்ற கேள்வி எப்பொழுது எழுகிறதோ அப்பொழுதே உனது உன்மெய் உன்னை அழைக்கிறது என்பதை தெரிந்து கொள்.
நீ உலக பற்றறை துறக்காத வரையில் உனக்கான குருவையும் உனக்கான சுய ஒளியையும் எந்த காலத்திலும் அடைய முடியாது. வாழ்வதும் வாழ்வதின் அனுபவங்களில் தெளிவதுமே இறைவனை அடையும் முழு பரிமாணமாகும்.
வாழ்க்கையை துறப்பதும் மற்றவர்களை போன்று தன்னை உருமாற்றம் செய்து கொள்வதும் மற்றவர்களை பின்பற்றுவதும் நீ உனக்கான இறை பரிமாணத்தை இழக்கும் செயலாகும்.
பிரபு
வாழ்க வாழ்கவென
வாழ்க குருவே போற்றி..
இறையை பற்றி
பிறரை போல இல்லாமல்..
தனித்துவமாக
இறைவனை தேடு..
என்ற சத்தியம்
வரவேற்க கூடியது குருவே..
நன்றி நன்றி தொடர்க குருவே..