‘அண்ணல் வழி’ இயக்கம் சார்பில், கற்பி, புரட்சிசெய், ஒன்றுசேர் : படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு நிகழ்ச்சி!

Share Button
‘அண்ணல் வழி’ இயக்கம் சார்பில், கற்பி, புரட்சிசெய், ஒன்றுசேர் எனும் கருத்துக்கு ஏற்ப, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான அனைத்து உதவிகளையும் மேற்கொள்ளும்  நிகழ்ச்சி கிருஷ்ணகிரி மாவட்டம்,  ஊத்தங்கரை பகுதியில் உள்ள புதூர் புங்கணை கிராமத்தில் நடைபெற்றது.
இதில் அமைப்பின் முக்கிய நிர்வாகிகள், செயற்பாட்டாளர்கள் பலர் கலந்துக் கொண்டு தொடங்கி வைத்தனர். இதுப் பற்றி கூறிய, முக்கிய ஆலோசகரான திரு.சாக்கியன் மற்றும் திரு.பிரபாகரன் அவர்கள் கூறும் பொழுது…
அண்ணல் வழி நற்பணி இயக்கம் சார்பில், தொடர் செயற்பாடாக, தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் விண்ணப்பிக்கும் பணியினை செம்மையாக செயல்படுத்தி, இன்று ஊத்தங்கரை வட்டத்தில் உள்ள படித்த இளைஞர்களுக்கு வாழ்க்கை தரம் உயர, வேலைவாய்ப்பு பயிற்சி, புத்தகம், மற்றும் உபகரணங்கள் வழங்கி, இணைய வழி விண்ணப்பித்து அதற்கான விண்ணப்ப கட்டணத்தையும் செலுத்தி உதவி செய்கிறோம்.
அதன்பின்னர், அவர்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கி அவர்களை சிறந்த முறையில் தேர்வினை எழுத ஊக்கப் படுத்துகிறோம்.   ஒரு மாணவனுக்கு தேவையான உயர்ந்த பொருள் கல்வி தான். அதனை அண்ணல் வழியில் நின்று, மாணவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு கிடைக்க செய்ய உதவி செய்து வருகிறோம்.
ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள படித்த இளைஞர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த முயன்று வருகிறோம். இது படிப்படியாக ஒவ்வொரு கிராமத்தில் இருந்து மாநில அளவில் செய்ய திட்டமிட்டு அதற்காக பல்வேறு உதவும் மனப் பான்மை உள்ள நண்பர்களின் உதவியோடு மேற்கொண்டு வருகிறோம்.
இன்று ஊத்தங்கரை வட்டம் புதூர் புங்கனை கிராமத்தில்,  ரயில்வே, போலீஸ், அஞ்சல்துறை. TET மற்றும் வருவாய் பணிக்கான விண்ணப்பிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் 50 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துக் கொண்டு அரசு தேர்வுக்கு விண்ணப்பித்தனர். ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள படித்த இளைஞர்களுக்கு  அரசு பணியில் உள்ள தொண்டு மனப் பான்மை உள்ளவர்கள், அந்த பகுதியில் உள்ள வேலைவாய்ப்பு அற்ற இளைஞர்களுக்கு போதிய  உதவிகளை அண்ணல் வழியில் செய்ய வேண்டும் என்ற உன்னத நோக்கத்தை வலியுறுத்தும் வகையில் இந்த அமைப்பு செயல்பட்டு வருவதாக கூறினார். உடன் ஆறுமுகம், ராஜா, அசோக், பழனி மற்றும் பிரகாசம் ஆகியோர் இருந்தனர்.
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *