சேலம் மாவட்டத்தில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள்
கொரோனா தொற்று மூன்றாம் அலை தற்போது பல்வேறு மாவட்டங்களில் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு மேலும் இரண்டு வாரங்களுக்கு கூடுதல் ஊரடங்கை அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று எந்ததெந்த மாவட்டங்களில் அதிகம் பரவுகிறதோ, அந்த மாவட்டங்களில் அந்ததந்த மாவட்ட ஆட்சியர்களே ஊரடங்கை அறிவிக்கலாம் என அரசு மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், சேலம் மாநகர எல்லைக்குள் செயல்படும் மால்கள், ஜவுளி கடைகள், நகைக் கடைகள், வணிக நிறுவனங்கள் ஆகியவை மாலை 6 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்ததவிட்டுள்ளார்.
கொரோனா தொற்று மேலும் பரவாமல் தடுக்க தமிழ்நாடு அரசுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டுமெனவும் மாவட்ட ஆட்கியர் கேட்டுக்கொண்டுள்ளார். அத்தியாவசிய பணி தவிர மக்கள் அதிகமாக வெளியே வர வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.