முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு

Share Button

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று ரெய்டு. பின்னர் அவருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் நண்பர்கள், உறவினர்கள், அதிகாரிகள் வீடுகளில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட உள்ளதாக தெரிகிறது.

முதற்கட்டமாக, எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் இன்று காலை 6 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கடந்த அதிமுக ஆட்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மிகுந்த விசுவாசமாகவும், முக்கிய அதிகாரம் வாய்ந்த அமைச்சராகவும் இருந்தவர்.

ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு என் மீது முதல் ரெய்டு விடுவார்கள் என்று கடந்த மாதம் 28 ஆம் தேதி திமுக அரசைக் கண்டித்து அதிமுக நடத்திய போராட்டத்தில் எஸ்.பி.வேலுமணி பேசியது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆட்சிக்காலத்தில் அரசு கட்டுமானப் பணிகளில் ஊழல் நடைபெற்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து இந்த சோதனை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

கோவையைத் தொடாந்து சென்னை மற்றும் அவருக்கு நெருக்கமாக தொடர்புடைய இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமாக இருந்த அதிகாரிகள் வீடுகளிலும் சோதனை நடந்து வருகிறது.

இந்நிலையில் கோவை குனியமுத்தூரில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் காலை 6 மணி முதல் தமிழ் நாடு லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில், உறுப்பினர்கள், தொண்டர்கள், சட்டமன்ற அதிமுக உறுப்பினர்கள் என எஸ்.பி.வேலுமணியின் வீட்டிற்கு முன்பு குவிந்து வருகிறார்கள். கோவையில் பரபரப்பான சூழ்நிலையே நிலவிவருகிறது.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Comments are closed.