KAL Educational Academy சார்பில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி மற்றும் பேச்சுப்போட்டி நடைபெற்றது!

Share Button

அரக்கோணம், ராணிப்பேட்டை மாவட்டம் :-

KAL EDUCATIONAL ACADEMY சார்பில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் பள்ளி மாணவர்களுக்கு 17-7-2022 அன்று ஓவியப்போட்டியும் 31-7-2022 அன்று பேச்சுப்போட்டியும் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

KAL Educational Academy யின் Managing Director திரு.G.சௌரிநாதன் அவர்கள் தலைமையேற்று சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்விற்கு வருகைபுரிந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரையும் வரவேற்று பேசி அனைவருக்கும் சிறப்பு செய்தார் திரு.சௌரிநாதன் அவர்கள்.

Trament Solutions நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு.சந்தோஷ்கரன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். KAL Educational Academy நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் K.சிவகுமார், முதுகலை கணித ஆசிரியர், கல்வியியல் வழிகாட்டுதல் & அறிவுரையாளர் மற்றும் N.G.கணேசன் ஆகியோர் பங்கேற்றனர். Japa Karunya Primary School ஆசிரியர் திருமதி.வாணி அவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

இந்த சிறப்பு மிக்க நிகழ்ச்சிக்கு A.L.Nagarajan, Advocate அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, ஓவியப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பு செய்தார்.

இந்நிகழ்வினைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு M.S.Senthil Velavan, M.B.A., (Proprietor, Senthil Printers) அவர்கள் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பு செய்தார்.

KAL Educational Academy சார்பில் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்வினைத் தொடர்ந்து மாதம் ஒருமுறை மாணவர்களுக்கான பல்வேறு தன்னம்பிக்கையூட்டும் வகையில் ஓவியப்போட்டி, கட்டுரை போட்டி, பேச்சுப்போட்டி ஆகியவை நடத்தி மாணவர்களின் நல்வழிகாட்டலுக்கு உறுதுணையாக இருப்போம் என்று KAL Educational Academy யின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு.G.சௌரிநாதன் அவர்கள் தெரிவித்தார்.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *