சிவசங்கர் பாபா மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை விசாரணையில் பரபரப்பு தகவல்

Share Button

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது முன்னாள் மாணவிகள் அளித்த புகாரின் பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான சிவசங்கர் பாபா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பதை அனைவரும் அறிந்த ஒன்று.

சிவசங்கர் பாபா மீது தொடரப்பட்ட பாலியல் வன்கொடுமை சம்பந்தமான குற்றச்சாட்டுகள் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தனித்தனியாக 3 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். ஆகவே, அவர் மீது போக்சோ சட்டப்பிரிவும் அவர் மீது பாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் மாணவிகள் மூன்று பேர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது தொலைக்காட்சிகளில் பரபரப்பை ஏற்படுத்தியது. அனைவருக்கும் பெரும் அதிர்ச்சையையும், மக்கள் மத்தியில் சங்கடத்தையும் ஏற்படுத்தியது. மாணவிகள் அளித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிவசங்கர் பாபா மீது செங்கல்பட்டு கோர்ட்டில் முதல் வழக்கில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பாக விசாரனையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மாணவிகளிடையே பாலியல் வன்கொடுமை மற்றும் துன்புறுத்தல்களில் ஈடுபட்டுள்ள தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த விசாரனையின் அடிப்படையில் வைத்து பார்க்கும்போது சிவசங்கர் பாபா மாணவிகளின் பாலியல் வன்கொடுமை புகாரின் பேரில் எளிதில் ஜாமினில் வெளியே வர முடியாத நிலையும் தற்போது ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இனி வரும் காலங்களில் இதுபோன்ற பாலியல் வன்கொடுமைகள் நடக்காதவண்ணம் பல்வேறு நடவடிக்கைகளும் எடுத்து வருவதாக சிபிசிஐடி போலீசார் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் மாணவிகளை அந்தந்த பள்ளிகள் தொடர்ந்து கண்காணித்து உரிய பாதுகாப்பை வழங்கிட வேண்டும் எனவும் மக்கள் மத்தியில் பேசப்படுகிறது. பெற்றோர்களும் தன் பிள்ளைகளை விழிப்புடன் கவனிக்க வேண்டும் என்பதும் இந்த செய்தி குறிப்பு உணர்த்துகிறது.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Comments are closed.