தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்ய வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Share Button

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில், சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை லேசான மழை பெய்தது. வளிமண்டல மேலடுக்கு சூழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழநாட்டில் ஒரு சில மாவட்டங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அந்த வகையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் குறிப்பாக வேலூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை நேற்று அதிகாலை முதல் பெய்து வருகிறது.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Comments are closed.