கிருட்டினகிரி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 07/02/2019 காலை 11.00 மணியளவில் கிருட்டினகிரி புதிய பேருந்து நிலையம் அண்ணா சிலை எதிரில் ஜாதியை பாதுக்காக்கும், பெண்களை இழிவுப்படுத்தும் மனுதர்மம் எரிப்புப் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் பெ.மதிமணியன் தலைமை வகித்து பேசினார். மாவட்டச் செயலாளர் கா.மாணிக்கம், ஓசூர் மாவட்ட கழகத் தலைவர் சு.வனவேந்தன், பொதுக்குழு உறுப்பினர்கள் மு.துக்காராம், தா.சுப்பிரமணியம், ஓசூர் கழக மாவட்டச் செயலாளர் அ.செ.செல்வம், மேனாள் மாவட்டச் செயலாளர் பழ.பிரபு, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தி.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தை தருமபுரி மண்டல திராவிடர் கழகச் செயலாளர் கோ.திராவிடமணி தொடங்கி வைத்துப் பேசினார்.
திராவிடர் கழக மாநில அமைப்புச் செயலாளர் தருமபுரி ஊமை. செயராமன் போராட்டத்தை விளக்கி மனுதர்மம் என்ற ஜாதியை பாதுகாக்கும், பெண் உரிமையை பறிக்கும் ஒரு குலத்துக்கு ஒரு நீதியான மனுதர்ம கொலைகார நூலை விளக்கி சிறப்புரையாற்றினார்.
கிருட்டினகிரி மாவட்டத் தலைவர் பெ.மதிமணியன், மாவட்டச் செயலாளர் கா.மாணிக்கம், தருமபுரி மண்டலச் செயலாளர் கோ.திராவிடமணி உள்ளிட்ட 26 பேரை போலீசார் கைது செய்தனர்.













Leave a Reply