பிளாஸ்டிக்கை ஒழித்து விவசாயத்தை காக்க வலியுறுத்தி மோட்டார் சைக்கிளில் நின்றபடியே பொது மக்களிடம் விழிப்புணர்வு பயணத்தை மேற்கொண்டுள்ள பெண் தையல் தொழிலாளிக்கு கிருஷ்ணகிரியில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.
கோவை மாவட்டம், அவனாசியை சேர்த்தவர் சைபி மேத்யூ வயது 46, தையல் தொழிலாயான இவர் பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தமிழகத்தினை காக்கும் வகையில் விழிப்புணர்வு பயணத்தினை மேற்கொண்டுள்ளார்.
கடந்த மாதம் ஊட்டியில் இருந்து பைக்கில் நின்றபடி சுமார் 10 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை சென்று பொது மக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளிடையே விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கோண்டுள்ள இவர் பிளாஸ்டிக்கின் பயன்பாட்டை ஒழித்து, விவசாயத்தினை காப்பாற்றுவதோடு, இயற்கையை பாதுகாக்க வலியுறுத்தி தன்னந்தனியாக இந்த விழிப்புணர்வு பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
பல்வேறு மாவட்டங்கள் வழியாக விழிப்புணர்வு ஏற்படுத்திய சைபி மேத்யூ இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் வருகை தந்தார். அவருக்கு கிருஷ்ணகிரி மாவட்ட கண்தானத் திட்டத் தலைவர் பிரபாகர் அவர்கள் தலைமையில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.
இதன் பின் சைபி மேத்யூ பொதுமக்கள் மட்டுமின்றி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மத்தியில் சென்று பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து மண்ணின் உயிர் தன்மையை காக்க வேண்டும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்தால் விவசாயத்தினை காக்க முடியும், எனவே அனைவரும் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்த்து அனைவரும் மரம் நடும் பழக்கத்தினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து சைபி மேத்யூ கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பைக்கில் நின்றபடி வாகனத்தை ஓட்டியவாறு பயணித்து பிளாஸ்டிக் கை ஓழித்து, இயற்கையோடு விவசாயத்தினை காப்போம் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேமலும் 28 வது மாவட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டம் வந்த இவர் அடுத்து வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் வழியாக வருகின்ற 7-ம் தேதி சென்னையில் தனது விழிப்புணர்வு பிரச்சாரத்தினை முடிக்க உள்ளார்.
Leave a Reply