
நடிகர் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம்தான் மகான். இப்படத்தின் தலைப்பு மகான் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், மாஸாக வெளியானது மகான் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர். விக்ரமும், அவரது மகன் துருவ் விக்ரமும் முதன்முறையாக இணைந்து நடித்து வரும் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார்.
7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் மூலம் லலித்குமார் இந்தப் படத்தை தயாரிக்கிறார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இப்படத்தில் பல முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்துள்ளது. இதற்கு முன்பு ‘சியான் 60’ என்று தெரிவிக்கப்ட்ட நிலையில், தற்போது இப்படத்திற்கு ‘மகான்’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். மகான் திரைப்படம் மாஸாக இருக்கும் என்று தமிழ் சினிமா வட்டார பிரபலங்களின் கருத்தாக உள்ளது.