கோவையில் கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களது தொழில் சார்ந்த திட்டமிடலை எவ்வாறு கையாள்வது என்பதற்கான ஒரு நாள் பயிற்சி முகாம் இரத்தனம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
கல்லூரியில் பயின்று வரும் மாணவ, மாணவிகள் கல்லூரி படிப்பை முடித்த பின்னர் தங்கள் திறனுக்கு ஏற்ற துறைகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது மேலும் சிறந்த தொழில் முனைவோர்களாக மாறுவதற்கு தங்களது திறனை வளர்ப்பது உட்பட மாணவ, மாணவிகளின் தொழில் சார் திட்டமிடல் குறித்த பயிற்சி முகாம் கோவை இரத்தினம் கல்லூரியில் நடைபெற்றது.
கலைத்துறை சார்ந்த மாணவ, மாணவிகளுக்கு என நடைபெற்ற இந்த முகாமை கல்லூரி தலைவர் மதன் செந்தில் துவக்கி வைத்தார். மேலை நாடுகளில் மெண்டோரிங் என அழைக்கப்படும் இதற்கான துவக்க விழாவில் 100 டிகிரி அமைப்பின் தலைவர் ரமேஷ் வரவேற்று பேசினார்.
இதில் ஊடகம், மருத்துவம் கல்வி, உட்பட பல்வேறு துறை சார்ந்த வல்லுனர்கள் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடினர்.
இதில் நுழைவுத் தேர்வுகள் குறித்தும், தேர்வாணைய தேர்வுகளை எப்படி கையாண்டு வெற்றி பெறலாம், கல்லுாரி படிப்பிற்கு பின், எந்தெந்த வேலைக்கு எந்தெந்த படிப்பை படிக்கலாம், படித்த கல்விக்கு எந்தெந்த வேலைகள் செய்யலாம் போன்ற தொழில் வழிகாட்டி பயிற்சிகள் நடைபெற்றது.
பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கல்லூரியின் மேலாண் இயக்குனர் மாணிக்கம், நாட்டிலேயே முதன் முறையாக கல்லூரி மாணவர்களின் தொழில் சார்ந்த திறமைகளை வளர்த்தி கொள்ள அவர்கள் கல்லூரியில் பயிலும் போதே தெரிந்து கொள்ளும் விதமாக இந்த பயிற்சி முகாமை நடத்துவதாகவும், கல்லூரி மாணவ, மாணவிகள் கல்லூரி படிப்பை முடித்த பிறகு தங்களின் துறையை தாமாக தேர்வு செய்து அதில், சிறந்த தொழில் முனைவோர்களாக அவர்கள் உருவாக இது போன்ற பயிற்சி முகாம்கள் பயனுள்ளதாக அமையும் என தெரிவித்தார்.
Leave a Reply