கோனியம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை (6-3-19) இன்று நடைபெற்றது. கோவை கோனியம்மன் திருக்கோயிலின் தேர்த் திருவிழா ஆண்டுதோறும் 14 நாள்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழாவுக்கு பூச்சாட்டுதல் நிகழ்வுடன் தொடங்கியது.
https://youtu.be/HfmDEkiROCY
இதைத் தொடர்ந்து மாசி மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமையான அன்றுஅக்கினி சாட்டு மற்றும் கொடியேற்றப்பட்டு விழா தொடங்கியது. இதைத் தொடர்ந்து, தினசரி மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை ஓதுவார் களின்தேவாரத் திருமுறை பண்ணிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் புதன்கிழமை இன்று பிற்பகல் 2.40 மணிக்கு துவங்கி மாலை 5’மணி வரை நடைபெற்றது.
இதில், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர் தேரோட்டத்தில், ராஜ வீதியில் இருக்கும் தேர், நிலைத் திடலில் இருந்து புறப்பட்டு ராஜ வீதி, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, கருப்பகவுண்டர் வீதி வழியாகச் வந்து மீண்டும் நிலையை வந்தடைந்த்து இதைத் தொடர்ந்துகொடியிறக்கமும், வசந்த விழாவும் நடைபெறுகின்றன. தேர் திருவிழா ஒட்டி தேர்சாலை முழுவதும் காவல்துறை அதிக அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
Leave a Reply