அறுவை சிகிச்சைகளை தவிர்த்து லேப்ராஸ்கோபி எனப்படும் நவீன முறையில் சிகிச்சை : குடல் நோய் சிகிச்சை நிபுணர் ராஜன் பேட்டி

Share Button
அறுவை சிகிச்சைகளை தவிர்த்து லேப்ராஸ்கோபி எனப்படும் நவீன முறை சிகிச்சை மேற்கொள்வதால், ரத்த சேதம், வலி குறைந்த அளவில் இருப்பதோடு நோயாளி விரைவில் குணமடைய முடியும் என பிரபல குடல் நோய் சிகிச்சை நிபுணர் ராஜன் தெரிவித்துள்ளார்.
https://youtu.be/bRhwq1Q64rg
கோவை, பாரதியார் சாலையில் உள்ள எல்.சி.மருத்துவமனையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த மாதம் முழுவதும் இலவசமாக பெண்களுக்கென லேப்ராஸ்கோபி பரிசோதனை இலவசமாக செய்யப்பட உள்ளது.
இது குறித்த செய்தியாளர்களிடம் பேசிய லேப்ராஸ்கோபி சிகிச்சையின் சிறப்பு நிபுணர் ராஜன், பல்வேறு விதமான வயிறு மற்றும் குடல் தொடர்பான நோய்களுக்கு அறுவை சிகிச்சை செய்யாமல், லேப்ராஸ்கோபி எனப்படும் நவீன சிகிச்சை மூலமாகவே நோயை குணப்படுத்துவதாக தெரிவித்தார்.
தொடர்ந்து மருத்துவமனையின் தலைவரும் மருத்துவருமான வித்யாராஜன் பேசுகையில், கர்ப்பப்பை வாயில் ஏற்படும் பல்வேறு விதமான நோய்களுக்கும் அறுவை சிகிச்சை செய்யாமல், லேப்ராஸ்கோபி மூலம் நுண் துளை, சிகிச்சை செய்ய இயலும் என கூறிய அவர்.
இதில் ரத்த சேதம், வலி குறைந்த அளவில் இருப்பதோடு நோயாளி விரைவாக வீடு திரும்ப முடியும் என தெரிவித்தார். அதே போல, ஹெர்னியா அறுவை சிகிச்சையை பிரச்னை ஏற்படும் முன், விரைவாகச் செய்து கொள்வது நல்லது. லேப்ராஸ்கோபி மூலம், ஹெர்னியாவுக்கு எங்களது மருத்துவமனையில் நுண்துளை  சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.
லேப்ராஸகோபி சிகிச்சை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த மாதம் முழுவதும் இலவசமாக லேப்ராஸ்கோபி பரிசோதனை முகாம் நடைபெறுவதாகவும் தெரிவித்தார் பெண்களுக்கு ஏற்படும் பல்வேறு விதமான நோய்களுக்கு இந்த நுண்துளை சிகிச்சை  மூலம் சரி செய்யலாம். பிரச்னைக்குரிய,கட்டிகளை லேப்ராஸ்கோபி சிகிச்சை வாயிலாகவே நீக்குவதாகவும் அறுவை சிகிச்சைகளை தவிர்க்கவே இது போன்ற நவீன சிகிச்சை முறைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *