330 நாள் சிறைவாசகத்திற்குப் பின் வெளியே வருகிறார் பேராசிரியர் நிர்மலா தேவி
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியில் வேலைப் பார்த்த பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கடந்தாண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார் .
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்திற்கு சிபிசிஐடி போலிசார் விசாரணை நடத்தினர். நிர்மலா தேவியுடன் பேராசிரியர். முருகன், ஆய்வு மாணவர். கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் பலமுறை ஜாமீன் கேட்டும் மறுக்கப்பட்டதால் கருப்ப சாமி யும், முருகனும் உச்சநீதிமன்றத்தில் மணு தாக்கல் செய்து ஜாமினில் வெளி வந்தனர். இதனிடையே பேராசிரியை நிர்மலா தேவியும் ஜாமீன் கேட்டும், பலமுறை மணுதாக்கல் செய்த போதும் அந்த மணுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
அகில இந்திய ஜன நாயக மாதர் சங்கத் தலைவி சுகந்தி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மணுவில் நிர்மலா தேவி விவகாரத்தில் பல முக்கிய புள்ளிகளுக்கு தொடர்புள்ளதாகவும் யாருக்காக அவர் மாணவிகளிடம் பேசினார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படவில்லை என்று குறிப்பிட்ட சுகந்தி நிர்மலா தேவி வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என கோரி இருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது நிர்மலா தேவிக்கு ஜாமீன் கிடைக்காமல் தடுப்பது எது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் திருவில்லிப்புத்தூர் நீதிமன்ற விசாரணைக்கு தடை விதித்த மதுரை உயர் நீதிமன்றக் கிளை மார்ச் 12ந் தேதி நிர்மலா தேவியை நேரில் ஆஜர் படுத்த வேண்டும் என உத்தரவிட்டது.
இதையடுத்து இன்று பேராசிரியை நிர்மலா தேவியை காவல்துறையினர் நேரில் ஆஜர்படுத்தினர் . இதையடுத்து தனி அறையில் நிர்மலா தேவியை நீதிபதிகள். கிருபாகரன், s.s சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது சுமார் ஒன்றரை மணி நேர விசாரணையிக்குப் பின் பேராசிரியை நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
Leave a Reply