தேடல் அவசியம் தானா? தேடலினால் நடந்தது என்ன? – சரியான முடிவுகளை எடுப்போம்

Share Button
நீங்கள் ஒரு புத்திசாலியாக இருக்கலாம், இருந்தாலும் உங்கள் தொப்பியிடமும் யோசனை கேளுங்கள். இந்த சொற்றொடர் எனக்கு படித்ததில் பிடித்தது. தேடல் துவங்கியது. எதை நோக்கியது என்பதை நீங்கள் சொல்லுங்கள்.
தேடல் அவசியம் தானா? தேடலினால் நடந்தது என்ன? மனிதனின் காட்டு வாழ்க்கையின் தேடலே நம் இன்றைய வாழ்கை. தேடித் தேடி கண்டு கொண்டோம் ஆனால் கொண்டதை தொலைத்துவிட்டோம். தேடினேன் ஏன் சிங்கம் என்று, ஏன் புலி இல்லை என்று. புலி ஒரு கம்பீரமான மிருகம். மிகவும் அழகானதும் கூட. என்ன ஒரு வீர நடை. அழகும் அறிவும் வீரமும் ஒருசேர வாய்க்கப்பட்ட ஒரு அழகிய மிருகம்.
பலமும் பலவீனமும் ஒன்றே சிங்கத்துடன் ஒப்பிடுகையில், இவ்வளவும் இருந்தும் ஏன் சிங்கத்தை நாம் காட்டின் ராஜா என்கிறோம். புலியை ஏன் அவ்வாறு அழைக்கவில்லை. யாரின் ஓரவஞ்சனை? பார்க்க அழுக்கின் மொத்த உருவமாய். சோம்பேறித்தனத்தின் குத்தகையாய் இருக்கும் சிங்கத்திற்கு ஏன் ராஜ மகுடம்?
நாமும் வாழ்க்கையில் நினைப்பதுண்டு, எல்லா தகுதிகளும் இருந்தும் எனக்கு கிடைக்கவேண்டிய பதவி உயர்வு அவனுக்கு கிடைக்கிறது என்று. அடுத்தவரின் குறைகளைப் பட்டியலிட்டு அவனுக்கு இந்த உயர்வு எப்படி சரியில்லை என நாம் நம் மனதுக்கு ஆறுதல் சொல்வோம். நம் தவறுகளுக்கு நம்மை வழக்கறிஞராய் வைத்து வாதிடுவோம், ஆனால் மற்றவரின் தவறுகளுக்கு நம்மை நீதிபதியாய் தரம் உயிர்த்திக்கொள்வோம்.
என் ஒருவனின் தேடல் எனக்கு மட்டுமே அதன் பயன்பாடுகளைத் தந்துவிட்டு போவதில்லை, ஒவொருவரின் தேடலும்
பலருக்கும் பயனுள்ளதாகவே இருக்கும். இன்று நாம் என்ன தேடினோம். தினமும் ஒரு தேடலை பழகிக்கொள்வோம். இதோ தேடிய கதை… ஊரில் இருந்த திருடன் அருகில் இருந்த ஊருக்குச் சென்று திருட திட்டமிட்டான். பல தேடல்களுக்குப்
பிறகு, ஒரு பண்ணை வீட்டைக் குறித்துக் கொண்டான். இருள் சூழ்ந்தது, திட்டமிட்டபடி பண்ணை வீட்டுக்குள்
சென்ற திருடனுக்கு அங்கு நிற்கும் காவலர்களைப் பார்த்தபின் புரிந்தது எவ்வளவு ஆபத்தான சூழ்நிலையில் தான்
இருக்கிறோம் என்று.
திட்டத்தைக் கைவிட்டுவிட்டு வெளியேற முயலும்பொழுது, ஒரு மூட்டை தடுக்கி கீழே விழுந்தான். அதுவோ வெங்காய மூட்டை. வந்ததுக்கு இதிலிருந்து வெங்காயத்தை எடுத்துக்கொண்டு போவோம் என தன் பையில் நூறு வெங்காயங்களை எடுத்துப் போட்டுக்கொண்டான். புகைப்பட எத்தனிக்கும் போது, காவலர்களால் பிதாக்கப்பட்டான். மறுநாள் பண்ணையாரோ அவனுக்கு தண்டனையை வாசித்தார்.
1. நூறு ருபாய் அபராதம் செலுத்த வேண்டும் இல்லையேல்
2. நூறு சவுக்கடி வாங்க வேண்டும் இல்லையேல்
3. நூறு வெங்காயத்தையும் சாப்பிட வேண்டும்
இதில் எது வேண்டும் என்றார். திருடனோ, சற்றும் சிந்தியாமல், 3வது தண்டனையை தேர்ந்தெடுத்து வெங்காயங்களைச் சாப்பிடத் துவங்கினான். நான்கைந்து வெங்காயங்களுக்குப் பிறகு அவனால் சாப்பிட முடியவில்லை. உடனே 2வது தண்டனையைத் தேர்ந்தெடுத்தான். நூறு சவுக்கடி ஆரம்பமாயிற்று, 10 அடிகளுக்குப் பிறகு வலி தாங்கமுடியவில்லை என முதல் தண்டனையைத் தேர்ந்தெடுத்து 100 ருபாய் அபராதம் செலுத்தினான்.
பண்ணையார் சொன்னதோ மூன்றில் ஏதேனும் ஒன்று, ஆனால் திருடனோ தன் சிந்தியா சிந்தையால் ஒன்றன் பின் ஒன்றாக மூன்றையும் அனுபவித்தான். இந்த தேடிய கதையின் மூலம், முடிவுகளைச் சரியாய் எடுங்கள் என்பதே. தவறான முடிவுகளை எடுத்துவிட்டு, தவற்றை சரி செய்வதாக நினைத்துக்கொண்டு இன்னொரு தவறை செய்து மீண்டும் மீண்டும்.
தேடும் பொறுப்பை நம் முன்னோர்கள் நமக்கு விட்டு வைத்து செல்லவில்லை, அவர்கள் கண்டுபிடித்துவிட்டு வைத்துவிட்டே சென்றுருக்கிறார்கள். ஆகவே இப்போது நீங்கள் தேடவேண்டியது உங்கள் துறைகள் எதுவோ அவற்றை மேலும் சிறப்புறச்செய்து எவ்வாறு முன்னேறுவது என்பது மட்டுமே. தினம் ஒரு தேடலைக் கொள்வோம். சரி சிங்கத்திற்கு ஏன் ராஜ மகுடம்?
நா. சௌரிராஜன்
தன்முனைப்பு பேச்சாளர்
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

One response to “தேடல் அவசியம் தானா? தேடலினால் நடந்தது என்ன? – சரியான முடிவுகளை எடுப்போம்”

  1. கண்ணன் says:

    மிக மிக அருமையான பதிவு..நண்பரே..(சரியான முடிவு)1.நிலையான வேலை , வருமானம் கிடைக்பெற்றாலும் கூட மனது போதும் என்று நின்று விடுவது இல்லை.(தவறான முடிவு)2. மேலும் பல தொழில் செய்து பணம் சம்பாதிக்க முயல்வது இயல்பான செயலாகிவிட்டது.தாங்கள் பதிவிட்ட கருத்து ஒரு துறையில் வேலை செய்து அந்த துறைகளில் சிறப்பாக செயல்பட்டால் நாம் மட்டுமல்ல நாடே வளர்ச்சி பெற்று விடும் என்பதில் ஐயமில்லை. நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *