பாகிஸ்தான் எல்லையை ஒட்டி 12 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கர்தாப்பூர் குருத்வாராவுக்கு சீக்கியர்கள் விசா இல்லாமல் வந்து செல்வதற்கான சுதந்திர வழி எல்லையைத் திறந்து விட வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை பாகிஸ்தான் ஏற்றுக்கொண்டுள்ளது.
எனவே தினசரி 5,000ம் பக்தர்களும் விசேஷமான நாட்களில் 15,000 பயணிகளையும் அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த பாகிஸ்தான், தினசரி 500 பக்தர்கள் மட்டுமே 15 பேர் கொண்ட குழுவாக அனுமதிக்கப்படுவார்கள் என கூறியுள்ளது.
மேலும் இந்தியா, பாகிஸ்தான் அதிகாரிகள் அட்டார் எல்லையில் நடத்திய பேச்சுவார்த்தையில் கர்தாப்பூர் செல்ல விசா இல்லாமல் இந்தியர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அதே நேரத்தில் சிறப்பு அனுமதி பெறவேண்டும் எனவும் பாகிஸ்தான் அரசு வலியுறுத்தியுள்ளது.
Leave a Reply