ஐபிஎல் போட்டிகள் வரும் 23ம் தேதி சென்னையில் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் பலம் வாய்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோத உள்ளன. இதற்கான டிக்கெட் விற்பனை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று காலை முதல் விநியோகம் செய்யப்படுகிறது.
டிக்கெட் வாங்குவதற்காக கிரிக்கெட் ரசிகர்கள் நள்ளிரவு முதல் நீண்ட வரிசையில் காத்து இருக்கின்றனர். இந்த போட்டிகளுக்கான டிக்கெட் விலை ரூ.1500 முதல் ரூ. 6500 வரை விற்கப்படுகிறது. கடந்த ஆண்டு காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக எழுந்த பிரச்சினையில் ஐபிஎல் போட்டிகள் சென்னையில் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply