அறம் : அம்மாவுக்கு முடியல, 2 நாள் ஆஸ்பத்திரியில அலஞ்சு எனக்கும் ரொம்ப களைப்பா இருக்கு அண்ணா. அதா அம்மவுக்கு இட்லி வாங்கிகிட்டு போகலாம்னு வந்தேன்!

Share Button

அறம்…

இரவு 9 மணிக்கு பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் ஊர் அது. பக்கத்திலேயே சந்தை, இரயில் நிலையம், அப்பப்போ ஊர்வலம், பிரச்சனை, பிரச்சாரம்னு மக்கள் நடமாட்டம் எப்பவுமே இருக்கிற
ஊர் அது. இங்கு இரவு வேளையில், 7 மனி தொடங்கி 11 மணி வரைரோட்டோரத்தில் உள்ள இட்டிலி கடைகளுக்கு பஞ்சமே இருக்காது கூட்டம். இட்லி சட்டியில ஆவி வர்ரதுக்குள்ளயே எனக்கு உனக்கு ன்னு தன் ஆவி போக ஒரு கூட்டம் எப்பவுமே பறந்துகிட்டு இருக்கும்.

பகலெல்லாம் பாடுபட்டு,அழுத்து சழுத்து வீட்டில போயி சமக்க முடியாத நடுத்தர மற்றும் கீழ்தட்டு மக்கள்க்கு எல்லாம் இந்த கடைகள்தான் 5 ஸ்டார் ஹோட்டல். விக்கிற விலைவாசியில ரூ. 5 க்கு 1 இட்லி கூடவே 3 வித சட்னியும், சாம்பாரும் கொடுத்தா கோடி கும்பிடு போட்டு சாப்பிட வேண்டியதுதான்.
ஆவி பறக்க, வயிறு பசிக்க, பக்கத்தில இருக்கிறவன் நம்மளவெறுப்பேத்துற மாதிரியே பாக்க வெச்சு சாப்பிடுறது இன்னும் நமக்கு பசிய தூண்டுது.

அண்ணா இங்க ஒரு 4 இட்லி,….. அண்ணா நா அவங்களுக்கு முன்னடியே வந்துட்டேன்…. எனக்கு முதல்ல குடுங்க. ரொம்ப பசிக்குது…., அண்ணா அப்பவே 4 இட்லி கேட்டேன். இப்படியே அரை மணி நேரம் இட்லியை
காசுக்கு கெஞ்சியபடி உக்கர்ந்திருந்தனர். இட்லிக்கு அடிதடி, எனக்கு, உனக்கு, சாப்பிட, பார்சல் என்று ஆளுக்காள் தன் பேச்சு பலத்தைக் காட்டி கடைக்கார அண்ணனோடு வாதிட்டு வாங்கிக் கொண்டனர். அந்தக் கூட்டத்தில ஒரு பொண்னு, சுமார் 20 வயது இருக்கும்.. நல்லா பேண்ட், சர்ட் போட்டுகிட்டு,
கொஞ்சம் உதட்டு சாயம்,கண்ணுக்கு மை, ஒல்லியான தேகமாய் ரொம்ப நேரமாவே இட்லி பார்சலுக்காக காத்துக்கிட்டு இருக்கு.

அவளுக்கு துணையாக அவளை விட்டு சற்று தள்ளிய தூரத்தில் ஒரு நடுத்தர வயது பெண்மணி ‘சீக்கிரம்’…என்ற முன்ங்களுடனே காத்துக் கொண்டிருந்தாள். ஒரு வழியா கடைக்காரர் இட்லிய அந்த பொண்ணுக்கு கொடுத்துட்டார். கூடவே ஏன் பாப்பா வீட்டில சமைக்கலையா என்ற கேள்விக்கு, இல்லை
அண்ணா… அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. 2 நாள் கழிச்சு இன்னைக்குத்தான் ஆஸ்பத்திரியில் இருந்து கூட்டிட்டு வந்தோம்.

அம்மாவுக்கும் முடியல. 2 நாள் ஆஸ்பத்திரியில அலஞ்சு எனக்கும் ரொம்ப களைப்பா இருக்கு அண்ணா. அதா அம்மவுக்கு இட்லி வாங்கிகிட்டு போகலாம்னு வந்தேன் என்று சொன்னவுடன் தட்டில் பாதிய சாப்பிட்ட
நிலையிலேயே பல ஆண்களது கண்கள் பல்வேறு கேள்விக்கணைகளோடு அவள் மீது விழுந்தது. பேசிக்கொண்டே, அவள், நீட்டிய பார்சலை வாங்கிக் கொண்டு, கடைக்கார்ர் கொடுத்த சில்லரை 30 ரூபாயையும் வாங்கிக்கொண்டு மெதுவாக அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.

அப்பெண் நகர்கின்ற வேளையிலே, ஒரு வயதான பிச்சைக்கார பெரியவர் ஒருவர் உணவுக்காக கையேந்திக் கொண்டு அந்த எடுப்புக்கடையின் அருகே நிற்பவரிடமும், உண்பவரிடமும் ஒவ்வொருவரிடமுமாய் உணவுக்கான உதவியை கேட்டுக்கொண்டே வருகிறார்.

எல்லோரும் முகத்தை ஒரு மாதிரியா சுளித்துக்கொண்டு திரும்பிக் கொள்கின்றனர். ஒரு சிலர் அவரை கவனிக்காதவர் போல அமர்ந்துக் கொண்டு, இட்லியை வேட்டையாடுவதில் மட்டும் தன் கவனத்தை
வைக்கின்றனர். நீட்டிய கரம் கடைக்கார்ர் பக்கமாக ஐயா… சாமி.. என்று நீள, கடைக்கார்ர் சிடு சிடுப்புடன், “ஏவார நேரத்தில சும்மா வந்து தொந்தரவு பண்ணக்கூடாது. அங்கிட்டு போ. என எரிந்து விழுந்தார்.
பிச்சைக்கார பெரியவர் கை ஒவ்வொருவரையாக கடந்து சென்று, மெதுவாக்க் கிளம்பிக்கொண்டிருந்த அப்பெண்ணின் வயிற்றுக்கு நேரே வந்த்து.

அம்மா… தாயி… என்று. பெரியவர் குரல் கேட்ட அப்பெண்ணின் கண்கள் சுருங்கியது. என்ன தாத்தா என்றாள். பசிக்குதம்மா.. ஏதாச்சும் குடும்மா… என்றார் பெரியவர். கிழக்கும், மேற்க்குமாய் பார்த்தாள் அந்த பெண். 10 நொடி பொழுது அமைதியில் ஆழ்ந்தாள். பின் சட்டென்று ,’தாத்தா நீ எப்போ சாப்பிட்ட?’ என்று கேட்டாள். பிச்சைக்கார பெரியவரிடம் அமைதி நிலவியது. பதில் ஏதும் வரவில்லை.அவர் சொல்லும் நிலையிலும் இல்லை. இந்தா தாத்தா இதுல 4 இட்டி சூடா இருக்கு, சாப்பிட்டுக்கோ என்று அவள் தன்
அம்மாவிற்காக வாங்கிய இட்லி பார்சலை நீட்டினாள்.

அதை வாங்கிய பெரியவர் அவளை கை எடுத்துக் கும்பிட்டார். தாத்தா இந்த பணத்தையும் வெச்சுக்கோ, நாளைக்கு ஏதாச்சும் வாங்கி சாப்பிட்டுக்கோ என்று கடைக்கார்ர் தந்த பாக்கி பணம் 30 ரூபாயையும் நீட்டினாள். பெற்றுக்கொண்ட பெரியவர், ஏதோ சொர்கம் கிடைத்துவிட்ட்து போல, முகத்தில் ஒரு மகிழ்ச்சியோடும், நெஞ்சில் ஒரு நெகிழ்ச்சியோடும் அவ்விடம் விட்டு நகர்ந்தார்.

சரி, வா பெரியம்மா போகலாம். என்று அப்பெண் உடன் வந்த பெரியம்மாவை அழைக்க, பெரியம்மாவிற்கு கோபம் வந்துவிட்ட்து. பைத்தியமாடி உனக்கு. அறிவு இருக்கா, இல்லையா, உன் கிட்ட இருந்ததே 50 ரூபா.. உன் அம்மவுக்கே உடம்பு முடியல. வாங்கின இட்லிய பெரிய இவளாட்டம் தானம் பன்னிட்ட.. வேற இட்லியும் இல்ல, கடையிலயையும் தீர்ந்திருச்சு. சரி தொலஞ்சு இட்லியதா குடுத்த, கையில இருந்த 30 ரூபாயையும் ஏண்டி குடுத்த? இப்போ சோத்துக்கு என்ன பன்னுறது? இந்த நேரத்துக்கு மேலே எங்கயும் சாப்பிட ஒன்னும் கிடைக்காது. உடம்பு சரியில்லாதவள பட்னி போட போறியா? அறிவு கெட்டவளே என்று கோபத்தில் திட்டிய
பெரியம்மாவின் குரல் எடுப்புக் கடையில் இருந்த அனைவரின் கவணத்தையும் ஈர்த்தது. சிலர் ஏளனமாக சிரித்தனர். சிலர் இருமாப்பில் சிரித்தனர். சிலர் என்ன நடந்த்து என்று தெரியாமலேயே சிரித்தனர்.

அத்தனையையும் நொடிப் பொழுதில் கவனித்த அந்த பெண் தன் முகத்தை சற்று இறுக்கமாக வைத்துக் கொண்டு சொன்னாள். பெரியம்மா..அம்மாவிற்கு உடம்பு சரியில்லை என்று காலையிலேயே ஜெபம் பன்ன போனோம். நன்றாக மனதார வேண்டிக்கொண்டோம் அம்மா குணம் பெற வேண்டும் என்று. அப்போ, இறை வழிபாட்டிலே பாதர் என்ன சொன்னார்?“ இயலாதவர்களுக்கு இயன்றவர்கள் கொடுத்து உதவுங்கள். கர்த்தர்
உங்களுக்குத் துணை இருப்பார்” என்று சொன்னாங்கல்ல.. ஆமாண்டி அதுக்கென்ன இப்போ !.. பெரியம்மா… நாம காலையில சாப்பிட்டோம், மதியமும் நல்லா சாப்பிட்ட நமக்கே இப்போ இவ்வளவு பசிக்குதே…. அவரு எப்போ சாப்பிட்டாருன்னே தெரியல.

அவரு வயிறு எவ்வளவு பசிக்கும்? பாவம் பெரியம்மா தாத்தா. அதா இட்லிய குடுத்துட்டேன். நல்லா சப்பிடட்டும். என்னடி பாவம்…பாக்கவே ஒரு மாதிரியா இருக்கு இதுல தாத்தா னு உறவு வேற கொண்டாடுற. இருந்த பணத்தையும் அந்த ஆளுக்கு வாரிக் கொடுத்துட்டா பெரிய தர்மகத்தா……கர்த்தர் சொன்னாரு மத்தவங்களுக்கு உதவனும்னு. அதுக்குன்னு இப்படியா நமக்குன்னு கூட வெச்சுக்காம இருந்த்தையும் கொடுக்கனும்னு சொன்னரு.

ஏன் பெரியம்மா கோவிச்சுக்கிற, மத்தவங்களுக்கு உதவனும். சொன்னது கர்தர்தான். ஆனா நம்ம கிட்ட உதவின்னு கேட்டு வந்ததே ஒருவேளை கர்தரா இருந்தா !?… எடுப்புக் கடையில் நின்றிருந்த அனைவரின் பார்வையும் மீண்டும் அவள் மீது வீசியது பனிவாய்…

மீண்டும் ஒரு நல்ல சிறுகதையுடன் சந்திக்கிறேன்… நன்றி!

 

 

 

வண்ணத்தமிழ் சூர்யா, கோவை.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

5 responses to “அறம் : அம்மாவுக்கு முடியல, 2 நாள் ஆஸ்பத்திரியில அலஞ்சு எனக்கும் ரொம்ப களைப்பா இருக்கு அண்ணா. அதா அம்மவுக்கு இட்லி வாங்கிகிட்டு போகலாம்னு வந்தேன்!”

 1. ராம் says:

  அருமை

 2. நிலை அறிந்து தானம் செய்த அப்பெண்ணின் செயல் பாராட்டுக்குரியது. நல்ல சிறுகதை. வாழ்த்துக்கள்.

  • சுர்யா says:

   அன்பிற்கினிய வணக்கங்களும், நன்றிகளும் சகோ…..

 3. குணாஜீ says:

  நேரில் பார்த்த சம்பவமாய் உணர முடிகிறது,ஆசிரியருக்கு என் பாராட்டுக்கள்

 4. guru balan says:

  காலச்சூழலுக்கேற்ற நல்லபதிவு.
  சமூகத்தில் மனிதாபிமானம் குறைந்துக்கொண்டுயிருக்கும் சூழ்நிலையில்
  இக்கட்டுரையின் தேவை பெரிது
  வாழ்த்துக்கள் தொடர்ந்து படிக்கவும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *