ஆன்மிக பாடல் : (மெய்ஞான சூட்சும புலம்பல்) பாடல் ஆல்பமாக விரைவில் வெளியீடு :
பாடல் எழுதியவர் : பிரபு
இந்த ஆன்மிகப் பாடலை ஒரு பிரபல மக்கள் இசை பாடல்கர் பாட இருக்கிறார். பாடலுக்குரிய வரிகளை தற்போது வெளியிட்டுள்ளார். பாடல் வரிகள் இதோ உங்கள் பார்வைக்கு.
………………………………………………………………………………………………………………………………………………………………………………….
மரணத்தை தழுவும்,
முடிவில்லா கர்மம்
ஜெனனத்தை பற்றும்,
……….
ஜென்ம ஜென்மமாய்
பிறவிகள் நீளும்,
இன்ப துன்பமாய்
முடிவுகள் காணும்,
……….
போகும் புண்ணியம்
ஜெனனத்தை விதைக்கும்,
ஞானம் இதுவென
அனுபவம் உரைக்கும்,
……….
பழையது இதுவென
மரணம் சொல்லும்,
புதியது இதுவென
ஜெனனம் கொல்லும்,
……….
மரணத்தை கண்டு
ஐயத்தை கொள்ளும்,
மானுடம் இதுவே
விதியென நம்பும்,
……….
ஜெனனமும் மரணமும்
ஊன்னென கொள்ளும்,
மானுட மதியே
மரணத்தை வெல்லும்.
Leave a Reply