நடனப் பள்ளியை திறந்து வைத்த பிரபலம்
கிருஷ்ணகிரி :-
கிருஷ்ணகிரியில் புதியதாக உதயமான ஹேப்பி ப்பீட்ஸ் நடனபள்ளி
கிருஷ்ணகிரி மாவட்டம், சேலம் சாலையில் அமைந்துள்ள வி.என்.ஆர்.டவர்ஸ் கட்டிடத்தில் புதிதாக ஹேப்பி ப்பீட்ஸ் நடனப்பள்ளி கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக ஆரம்பமானது.
பொறியியல் பட்டதாரியான மெர்லின் நடன ஆசிரியராக உள்ள இந்த நடனப்பள்ளியின் திறப்பு விழாவை பிரபல தொலைக்காட்சி தொடரான கலக்கப்போவதுயாரு சீசன் 5-ன் வெற்றியாளரான குரேஷி கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி இன்று (15/10/2021) துவங்கி வைத்தார்.
மேலும் விழாவில் நகைசுவையாளர் குரேஷியின் நகைச்சுவை நிகழ்ச்சி, நடன கலைஞர்களின் ஆடல், பாடல் நிகழ்ச்சி மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.
Leave a Reply