துர்க்கம் ஸ்ரீ சென்னகேசவப் பெருமாள் சென்றாய சுவாமி திருக்கோவிலுக்கு இராஜகோபுரம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.
கிருட்டினகிரி மாவட்டம், போடர அள்ளி அருகில் பிக்கனஅள்ளி கிராமம் அடுத்த துர்க்கம் ஸ்ரீ சென்னகேசவப் பெருமாள் சென்றாய சுவாமி திருக்கோவிலுக்கு இராஜகோபுரம் அமைக்கும் பணிக்கு முன்னாள் அமைச்சரும் அ.இ.அ.தி.மு.க கழக துணை ஒருங்கினைப்பாளருமான கே.பி.முனுசாமி பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட செயலாளருமான அசோக்குமார் அவர்கள், மாவட்ட அவை தலைவர் சைலேஷ் கிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், முன்னாள் பேரூராட்சி தலைவர் வாசுதேவன், அண்ணாதுரை, மாவட்ட ஆவின் துணை தலைவர் குப்புசாமி மற்றும் வேனுகோபால், பழனிசாமி, கண்ணாயிரம், கே.வி.ரங்கநாதன், பாலகிருஷ்ணன் மற்றும் பாலக்கோடு, இராயகோட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கிராம ஊர்கவுண்டர்கள், பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.












Leave a Reply