தமிழகத்தில் தேர்தல் தள்ளி போகுமா?
நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்க்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன் படி ஏப்ரல் 18ம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடக்கும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் மதுரையில் வருடந்தோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழாவையொட்டி தேர்தல் நடந்தால் பாதுகாப்பு அளிப்பது சிரமம் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் தேர்தலை தள்ளி வைக்கும்படி கோரிக்கை எழுந்தது.
சித்திரை திருவிழாவில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டி இருப்பதால் கூடுதல் துணை ராணுவத்தை வைத்து தேர்தல் நடத்தலாம் என்று காவல்துறையினருடனான ஆலோசனையின் போது தெரிவிக்கப்பட்டது .
இதற்கிடையே தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என அனைத்து கட்சியினரும் மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளனர். மேலும் தமிழகத்தில் தேர்தல் தேதியை தள்ளி வைக்க முடியுமா என உயர்நீதிமன்ற மதுரை கிளையும் கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக வியாழக்கிழமைக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே சித்திரை திருவிழா திட்டமிட்டபடி நடைபெறும் என கள்ளழகர் கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. கள்ளழகர் எதிர் சேவை ஏப்ரல் 18ம்தேதி நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.
Leave a Reply