கோவை ஸ்ரீ கி௫ஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் 17 வது பட்டமளிப்பு விழா இன்று கல்லூரி வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெற்றது. இதில் 1000 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனர்.
கோவை தனியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் 17 வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவை ஸ்ரீ கி௫ஷ்ணா கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் மலர்விழி துவக்கிவைத்தார். மேலும் விழாவில் சிறப்பு வி௫ந்தினராக FOURKITES நிறுவனத்தின் துணைத்தலைவர் நீரஜ் சர்மா, மற்றும் பொதுமேளாளர் ஸ்ரீ. லட்சுமி நரசிம்மா நாராயண் கலந்துகொண்டு மாணவர்களிடையே எதிர்கால உலகலாவிய தொழில்நுட்ப தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக மாணவர்களுக்கு திறன் சார்ந்த, தொழில் நுட்பம் சார்ந்த கல்வியை வழங்கி,அவர்களை எதிர்கால சவால்களை சந்திக்கும் வகையில் பொ௫ப்புடன் கூடிய சிறந்த மனித வளமாக உருவாக்குவதே இன்றைய உயர்கல்வி நிறுவனங்களின் மிக நோக்கம் ஆகும்.
மேலும் இந்த பட்டமளிப்பு விழாவில் 1356 பட்ட சான்றிதழ்களை மாணவர்களுக்கு வழங்கினர் மேலும் கல்வியில் மிகச் சிறந்து விளங்கி உயர் மதிப்பெண்கள் பெற்ற 31 மாணவர்களை வாழ்த்தி கெளரவித்தனர் மேலும் பட்டம் பெற்ற மாணவர்களூள் 429 மாணவர்கள் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றதுடன் மற்ற மாணவர்களை விட உயர் மதிப்பெண்கள் பெற்றி௫ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .
மேலும் இவ்விழாவில் கல்லூரி முதன்மை செயல் அதிகாரி சுந்தரராமன் மற்றும் பல்வேறு தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், மற்றும் மாணவ,மாணவிகளின் பெற்றோர்கள் ஏராளமான்னோர் கலந்துகொண்டனர்.
Leave a Reply