திருப்பூர் மாவட்ட அளவிலான 8வது ரோலர் ஸ்கேட்டிங் போட்டி
திருப்பூர் :-
8வது திருப்பூர் சகோதயா காம்ப்லக்ஸ் CBSE பள்ளிகளுக்கிடையேயான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியினை கடந்த மாதம் 28.07.2023 தேதியில் SPRING MOUNT PUBLIC SCHOOL ல் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இதில் திருப்பூர் மாவட்ட அளவிலான 30 க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 400 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர்.
இதில் நமது பள்ளி A.K.R. ACADEMY SCHOOL CBSE மாணவ மாணவிகள் பங்கேற்று சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தி 15 தங்கம், 8 வெள்ளி, 4 வெங்கலம் என மொத்தம் 29 பதக்கங்களை வென்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தையும் தட்டிச் சென்றது.
மேலும், வெற்றி பெற்ற மாணவ, மாவியர்களைப் பாராட்டி பள்ளி தாளாளர் திரு. லட்சுமி நாராயணன், பள்ளி முதல்வர் திரு.கணேஷ், பள்ளி நிர்வாக அதிகாரி திரு.சுப்பிரமணியம் அவர்களும் மற்றும் இதன் பயிற்சியாளர் பிரகாஷ் பா அவர்களும் இணைந்து பாராட்டுச் சான்றிதழ்களையும் பதக்கங்களையும் வழங்கி சிறப்பித்தனர்.
திருப்பூரிலிருந்து நமது செய்தியாளர்
பிரகாஷ் பா
Leave a Reply